அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

ஞாயிறு, 20 ஜூன், 2010

எளிமை

நம்ம ஆளுங்ககிட்ட போய் எளிமை பத்தி சொன்னா அட சும்மா இருப்பா, இதல்லாம் இந்த காலத்துக்கு சரிபட்டு வராதுன்னு சொல்றாங்க. ஒண்ணுமே இல்லாதவங்க  தான் வெட்டியா பந்தா பண்ணிட்டு திரிவாங்க, அதோட இப்டி பண்ணினாத்தான் நாலுபேர் நம்மள மதிப்பாங்கன்னு வேற பீத்துவாங்க. உண்மைலயே இந்த வெட்டி பந்தா மற்றவர்களிடம் மதிப்பை ஏற்படுத்துகிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம்ம எல்லாருக்கும் தெரிந்த அம்பானி ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கிறார் அதுல அவர் சொல்ற விஷயம் என்னன்னா எவ்ளோதான் காசு பணம் இருந்தாலும் எளிமையான வாழ்க்கைதான் மனிதனைச் சீராக்கும், நிம்மதி தரும். எவ்ளோ பிஸியா இருந்தாலும் என் குடும்பத்தினருடன் பேசாமல் நான் தூங்க செல்வதில்லை. அதுபோல நான் வீட்டுக்கு வரும்வரை என் மனைவி மக்கள் சாப்பிடாமல்  காத்திருப்பார்கள். எல்லோரும் சேர்ந்து ஒன்னாதான் சாப்பிடுவோம். எங்களுக்குகென்று சொந்த flight  இருந்த போதிலும் நாங்கள் ஏர் இந்தியாவில்தான் பயணம் செய்வோம், என் பிள்ளைகள் ஹாஸ்டலில்தான் தங்கி படிகிறார்கள் என்று இப்படியே அவரின் எளிமையான வாழ்க்கை முறைப் பற்றி அடுக்கிறார். 

அறிஞர் அண்ணா அவர்கள் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, மிகுந்த கல்வி அறிவும்-புலமையும் பெற்று பேரறிஞராக, தமிழக மக்களின் நம்பிக்கைக்கு உகந்த ஒப்பற்ற தலைவனாக உயர்ந்தாலும், அறிஞர் அண்ணா தம் வாழ்நாள் முழுவதும் மிக எளியவராகவே வாழ்ந்தார். சரி அது போகட்டும்...

நம் உயிரின் மேலான நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பெருந்தலைவர், மாபெரும் ஆட்சியாளர், இன்னும் எத்தனையோ உயர்ந்த இடத்தில இருந்த அவர்களின் வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்று பார்த்தல், நமக்கெல்லாம் கண்ணீர்தான் வரும்...  இதோ பாருங்கள் அவர்களைப் பற்றி...
ஒரு முறை உமர் (றழி) அவர்கள் றஸூல் (ஸல்) அவர்களை சந்திக்கச் செல்கிறார்கள். அப்போது நபியவர்கள் ஒரு (ஈச்ச மர ஓலையால் பின்னிய) பாயில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவரது உடம்பின் மேற்பகுதியில் எந்தப் போர்வையும் இல்லை. இதனால் அவரது முதுகில் பாயின் அச்சுகள் பதிந்திருந்தன. அவரது வீட்டின் ஒரு மூலையில் ஒரு கைப்பிடியளவு கோதுமை விதைகளும் கடுமையான மேல் தோலைக் கொண்ட ஒரு வகை தானிய வகைகள் சிலவும் காணப்பட்டன. அவரது தலைக்கு மேலால் ஆட்டுத் தோல் தொங்கிக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த உமர் (றழி)க்கு அழுகை வந்துவிட்டது. இதனைப் பார்த்த நபியவர்கள் கத்தாபின் மகனே ஏன் அழுகிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு உமர் (றழி) அவர்கள்: அல்லாஹ்வின் தூதரே! ஏன் நான் அழாதிருக்க வேண்டும்? இதோ இந்தப் பாயின் அச்சுக்கள் உங்கள் முதுகில் பதிந்துள்ளன. உங்களிடம் இருக்கின்ற சொத்துக்கள் இதோ நான் பார்த்துக் கொண்டிருப்பவை மாத்திரம்தான். அங்கே கிஸ்ராவும் கைஸரும் அழகிய கனி தரும் மரங்களுக்கும் ஆறுகளுக்கும் மத்தியில் வாழ்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதராகவும் அவனின் சிறந்த படைப்பாகவும் இருக்கிறீர்கள்? ஆனால் இதுதானா உங்களது நிலை எனக் கேட்டார். இதைக் கேட்ட நபியவர்கள்: கத்தாபின் மகனே, எனக்கு மறுமையும் அவர்களுக்கு உலகமும் கொடுக்கப்படுவதை நீ விரும்பவில்லையா? எனக் கேட்டார்கள்.
இதைவிட எளிமையை வேறெங்கும் காணமுடியாது. ஆக இதிலிருந்து பாடம் பெற்று இறைவன் நமக்கு வழங்கி இருக்கிற வாழ்கையை எளிய முறையில் அனுபவித்து மற்றவர்க்கும் பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.

சனி, 12 ஜூன், 2010

ஒப்பீடு... Comparison

உலகத்துல யார பார்த்து இத கேட்டாலும், இப்புடித்தான் சொல்லுவாங்க. எப்டிங்க இருக்கீங்க? அட அத ஏங்க கேக்குறீங்க, அவன பாருங்க எப்டி சந்தோசமா இருக்கிறான், நானும் அவனும் ஒன்னதான் வெளிநாடு வந்தோம் அவன் எங்கயோ போய்ட்டான். நானும் என்னலாமோ பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆவமாட்டேங்குது. எனக்கு மட்டும்தான் இப்டிலாம் நடக்குது. இப்படி சலிதுகொள்ளும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்கத்தான் செய்கிறோம். அங்க ஊட்டு கார அம்மாகிட்ட கேட்டா எனக்கும்தான் வந்து வச்சிதே, எதித்த ஊட்டு காரர பாருங்க, வெளிநாடு போய் 2 வருசம்தான் ஆவுது இன்னைக்கு காரு பங்களான்னு செல்வ செழிப்போட சந்தோசமா இருகாங்க. (என்னவோ கூடவே இருந்து பார்த்தமாரி), இந்த மனிசனும்தன் இருக்காரு போயி 15 வருஷம் முடியபோவுது என்னத்த கட்டி முடிச்சாரு. இப்படி ஒவ்வொருவரும் அடுத்தவர்களை பார்த்து ஒப்பீடு செய்யும்போது இவர்களின் சந்தோஷம், நிம்மதி எல்லாமே தொலைந்து விடுகிறது. சமீபத்தில் பத்திரிக்கைல ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டு இருந்தாங்க. அடுத்தவர்களுடைய சம்பளத்தை ஒப்பீடு செய்வதால் நிம்மதி, சந்தோஷம் எல்லாம் தொலைந்து பணவெறியும் நிம்மதியின்மையும் அதிகரிக்கிறது என்று. இதுக்கு பெரிய ஆய்வுலாம் தேவை இல்லைங்க, நம்ம தினம் பார்க்கிறவர்களிடம் கேட்டாலே போதும், எல்லோர் வாழ்க்கையிலும் இப்படித்தான்... சரி இப்படியே போய்கிட்டு இருந்தா வாழ்க்கைல எப்டிதான் சந்தோசமா இருக்கிறது, இதற்கு இந்த உலகத்துல ஒரு நிரந்தர தீர்வு (solution) இல்லவே இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறது. அத பத்தி சொல்லத்தான் இந்த பதிவே!

தீர்வு 1:
உங்களுக்கு மேல் உள்ளவர்களை பார்த்து ஒருபோதும் உங்களை ஒப்பீடு (Comparison) செய்யாதீர்கள், அப்படி செய்தால் அங்குதான் உங்கள் நிம்மதியை தொலைக்கிறீர்கள்.

தீர்வு 2:
உங்களுக்கு கீழ் உள்ளவர்களை பார்த்து ஆகா நாம எவ்ளோ அதிர்ஷ்ட சாலி இறைவன் நமக்கு இவ்ளோ அருட்கொடைகள் செய்து இருக்கிறானே, அவர் நிலைமையில் நாம இருந்தா என்ன ஆகிருக்கும் என்று இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

தீர்வு 3:
எல்லாவித முயற்சிகளையும் செய்துவிட்டு, இறைவன் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். வெற்றி கிடைத்தால் இறைவனுக்கு நன்றி பாராட்ட வேண்டும், இல்லையென்றால் எனக்கு இறைவன் விதித்தது இதுதான் என்று நினைத்து இறைவனிடம் கேட்டு பிரார்த்திக்க வேண்டும்... 

இது நம் பழகத்தில் வந்துவிட்டால் இனி நிம்மதி உங்கள் சாய்ஸ்!

வியாழன், 20 மே, 2010

டீ....

உலகில்  அதிகமான மக்கள் நான் விரும்பி குடிக்கிறததான் விரும்பி குடிக்கிறாங்கலாம் அதான்பா டீ யை  தான் சொல்றேன். அதை பற்றிச் சில சுவையான தகவல்கள்

  • இதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் குணம் டீக்கு உண்டாம்.

  • தென்னிந்தியாவில் குன்னூர், இடுக்கி வயநாடு, வால்பாறை, மூணார், கூடலூர் பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயம் தான் பிரதான தொழில்.

  • டீ தூளின் எடையை கூட்ட கலப்படம் செய்யிறாங்களாம் அதுக்கு அவங்க புட் கலர் சேர்கிறாங்கலாம். புட் கலரா இருந்தாலும் சட்ட விரோதமானதும், உடல்நலத்துக்கும் நல்லதில்லையாம்.

  • இந்த கலப்பட டீயைக் கண்டு பிடிக்க ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் கொஞ்சம் போட்டு பார்க்கணுமாம். தண்ணீரில் கலர் பட்டிபட்டியாக இறங்கினால் அது கலப்படத் தேயிலை. நிறம் மாறாவிட்டால் கலப்படம் இல்லாதது. அதே போல் ஒரு பிளாஸ்டிக் பேப்பரின் மேல் ஒரு சிட்டிகை டீத்துளை பரப்பி அதன் மேல் நான்கைந்து சொட்டு தண்ணீரை விடணுமாம் பேப்பரின் நிறம் மாறினால் அது கலப்படம்.
ஒவ்வொரு ஊர் டீயும் ஒவ்வொரு கலர்.










நீலகிரி டீ ஆரஞ்சு கலர்








கென்யா டீ அடர் சிவப்பு




 







அஸ்ஸாம் டீ டார்க் பிரவுன்









டார்ஜிலிங் டீ தாமிர நிறம்

  • நீரை கொதிக்க வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து அதில் டீத்தூளை போட்டு 2 நிமிடம் கழித்து வடிகட்டி அப்படியே ப்ளாக் டீயாகவோ, பால் சேர்த்தோ குடிக்கணுமாம்.இதுதான் சரியான முறை.பாலிலோ, நீரிலோ டீத்தூளை போட்டு அது நிறம் மாறும் வரை கொதிக்க வைத்து குடித்தால் டீயின் ஒரிஜினல் சுவையை உணர முடியாதாம்

  • எல்லாத்துக்கும் மேல காஸ்ட்லி டீன்னு வேற இருக்குதாம். சில்வர் டீ, ஒயிட் டீ, பிராஸ் டீ ,...... இதெல்லாம்  ஹைகிளாஸ் மக்கள் விரும்பி குடிக்கிற டீயாம்.இதுல என்ன ஸ்பெஷல்னா சாதாரன டீ தூளில் 2 இலைகள் 1 மொட்டு சேர்த்து பறிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு தயாரிக்கபட்டால். இந்த காஸ்ட்லி டீ க்கு வெறும் மொட்டுகளை மட்டும் பறித்து,கைகளாலேயே கசக்கப்பட்டு, வெயிலில் உலர்த்தி தயாரிக்க படுதாம். 1கிலோ தேயிலையின் விலையே ஆயிரத்தை தாண்டிதானாம். 

ஞாயிறு, 2 மே, 2010

மே 1

             
மே 1 உழைப்பாளர் தினம்: எல்லா உழைப்பாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.    
தலைப்பு மே 1ன்னு வச்சுட்டு, 2ம் தேதி இந்த மேட்டர சொல்றதுக்கு மன்னிக்கவும், நேரம் கிடைக்காததே இந்த லேட் பதிவுக்கு காரணம். சரி விசயத்துக்கு வருவோம்.
எல்லா உழைப்பாளர்களுமே கடின உழைப்பாளிகள்தான் என்றாலும் முக்கியமாக  கட்டிடம்  கட்டும் பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள், ,....

போன்ற கடின உழைப்பாளிகளை நினைவு கூர்ந்து, அவர்களது  உழைப்பின் கடினத்தை உணர்ந்து நம்முடைய நிலைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். அல்ஹம்துலில்லாஹ்!

அதோடு இந்த உழைப்பாளர் தினம் எப்படி வந்தது? என்று சில நாட்களுக்கு முன்  படித்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அந்த காலங்களில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு நேர வரைமுறை இல்லை. வேலைக்கு போனால் வீடு திரும்பும் நேரம் தெரியாது. தொடர்ந்து ஓய்வே இல்லாத  வேலை. இந்த நிலையை மாற்றி, 8 மணி நேர  வேலையை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. அதில் முக்கியமானது அமெரிக்க தொழிலாளர்களின்  போராட்டம்தான். 1886ல் பல்வேறு மாகாணங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள் ஒன்றிணைந்து ''அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை உருவாக்கினர். மே 1 வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்கா முழுவதும் 3 லட்சம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர். தொழிற்சாலைகள் திணறின. மே 3 சிகாகோவில் ''மெக்கார்மிக் ஹர்வேச்டிங்(harvesting) மெசின்'' கம்பெனியில் 3000 பேர் தொடர் முழக்க போராட்டம் செய்தனர். அந்த போராட்டம் கலவரமாக மாறி 4 பேர் காவலர்களால் பலி ஆனார்கள். இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்கள் இதை கண்டித்து ஹே மார்க்கெட்-ல் கண்டன கூட்டம் நடத்தினர். இதிலும் கலவரம். ஒரு காவலர் பலியானார்.                                              
இதையடுத்து தொழிலாளர் தலைவர்கள் அகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பர்ட் பர்சன்ஸ், அடால்ப் பிஷர் ஜார்ஜ் ஏஞ்சல் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 1887 நவம்பர் 11ல் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இப்படி தொழிலாளர்கள் உயிர் தியாகம் செய்து கிடைத்ததுதான் நாம   இப்ப பார்த்துகிட்டு இருக்கிற இந்த 8மணி நேர வேலை.
இந்த போராட்டத்தை நினைவு கூறுவது தான் மே 1  உழைப்பாளர் தினம்

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஆபீஸ் கான்டீன்

காலைல ஏழு மணிக்கு  ஆரம்பிச்சு  சாய்ங்காலம் அஞ்சு மணி வரைக்கும்  எங்களோட  வேலை  நேரம். இடைல பிரேக் ன்னு சொல்லிக்கொள்ள அப்படி ஒன்னும் இல்லை என்றாலும், தொழுகை நேரத்திற்கு மட்டும் எந்த அனுமதியும் பெறாமல் போய் வர எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பகல் சாப்பாட்டுக்கு படும் பாடு சொல்லி மாளாது.

சீட்டில் இருந்தபடியே  keyboarda  லேசா நகர்த்தி வச்சுட்டு  அங்கேயே  இருந்துதான்  சாப்பிடணும். (ம்ம்ம் Lunch பிரேக் உள்ளவர்களெல்லாம் குடுத்து வச்சவங்க)  ஊர்ல எப்புடியெல்லாம் ராசாமாரி  இருந்தோம், எப்படியெல்லாம் அதிகாரம் செலுத்துனோம்  இப்போ இப்புடி வந்து கஷ்டபடுரோமேனு  எத்தனையோ பேர் (இங்கு family இல்லாதவர்கள்) சொல்லுவதை டெய்லி  கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், இதற்காகவே எங்கள் office இருக்கும்  பில்டிங்கில் பனிரண்டாவது மாடியில் ஒரு ஹோட்டல் திறக்க அனுமதி கொடுத்திருந்தார்கள், ஆனால் அதுவும் நிலைக்கலை. அங்கு செய்யும் சமையல் வாசனை அதே ப்ளோரில் (floor) இருக்கும் மத்த கம்பனியில வேலை செய்பவர்களின்  மூக்கை துளைத்ததால் அங்கு வேலை செய்யும் சாப்பாட்டு ராமன்களுக்கு தொந்தரவா இருக்குனு சொல்லி எடத்த  காலி பண்ண சொல்லிட்டாங்க. அப்புறம்  என்ன???  இப்படியே சில வருசம் பிஸ்கட்டும், காஞ்ச ரொட்டியும் (குப்ஸ்), பழமும் திண்டு லைப் ஓடிகிட்டு இருந்துச்சு.

இப்போ புதுசா  ஒரு மினி ரெஸ்டாரன்ட் (Bufiya) உருவாகி இருக்கு. இங்கு வச்சு  எதுவும் சமைக்க அனுமதி இல்லை அதனால அவங்க வெளியிலேருந்து கப்சா, பிரியாணி, சான்ட்விச், பிச்சா (pizza) போன்ற ஐட்டங்களை  செஞ்சு, கொண்டு வந்து இங்க விற்கிறாங்க.

 இது வெளியில விற்கும் விலையை விட ரெண்டு மடங்கு அதிகம் என்றாலும், இங்கிருக்கும் (சோம்பேறி) பாச்சுலர்களுக்கும் (bachelor) நேர  பற்றாக்  குறை உள்ளவங்களுக்கும் கிடைத்த வரப்ரசாதம்ன்னு தான் சொல்லனும் . நல்ல வேலை நமக்கு இந்த பிரச்னை இல்லப்பா...  தங்கமணி இருகிறதால!

சனி, 24 ஏப்ரல், 2010

மனம் கவர்ந்த கதை

சமீபத்தில் குடும்ப மலர் வார இதழில் ஒரு கதைப் படித்தேன், மனிதனின் சுயநலத்தைப் பற்றிதான். அடர்ந்த காடு வழியாக ஒரு மனிதன் சென்றான், அந்த வழியே இரைத் தேடி வந்த புலி அவனை பார்த்துவிடுகிறது. துண்ட காணோம் துணிய காணோம்னு மனிதன் ஓடறான், புலி விடவில்லை, துரத்தி கொண்டே போக, அவன் எப்டியோ அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிவிட்டன, ஆனாலும் புலிக்கு அவனை விடுவதாக ஐடியா இல்லை. மரத்தையே சுற்றிசுற்றி வருகிறது. பயத்தின் உச்சிக்கே சென்ற மனிதன் மரத்தை இறுக்கமாக பிடித்துகொண்டான். அப்போது தனக்கு பக்கத்தில் இருந்த கிளையில் எதோ அசைவதை உணர்ந்த  அவன் அங்கே ஒரு கரடி இருப்பதைக் கண்டு குலை நடுங்கி போனான். தன்னைப் பார்த்து மிரண்டு போன மனிதனைப் பார்த்து அந்த கரடி இரக்கம் கொள்கிறது. அவனைப் பார்த்து, மனிதா  என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம், நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று  சொன்னவுடன், அப்பாடன்னு ஒரு ஏக்க பெருமூச்சு விட்டான். கரடி சொன்னது, நீ உயிருக்கு பயந்து மரத்தில் ஏறும்போது என் காலில் கைவைதுவிட்டாய், அப்போதே நீ என்னிடம் அடைக்கலம் புகுந்துல்லாய், அதனால் நான் உன்னை எந்த நிலையிலும் கொள்ள மாட்டேன் என்று சொன்னது. அப்பாடா தலைக்கு வந்தது தலைப்பயோடு போய்டுச்சுன்னு பெருமூச்சு விட்டு மனிதன் கீழே குனிந்து பார்த்தான் புலி அங்கிருந்து நகர்வதாக இல்லை. அது நாசுக்கா கரடியிடம் சொன்னது  ஏ  கரடி நீயும் மிருகம், நானும் மிருகம் அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி ஒன்று  நீ அவனைச் சாப்பிடு இல்லையென்றால் கீழே தள்ளிவிடு நான் அவனைச் சாப்பிடுகிறேன் என்றது புலி. அதற்கு கரடி, அவன் என்னிடம் அடைகலம் தேடி வந்துள்ளான், நான் அவனை காப்பாற்றியே தீருவேன் என்றது. சிறிது நேரம் கழித்து மனம் தளராத புலி மனிதனிடம் வஞ்சகமாக மனிதனிடம் பேச்சு கொடுத்தது. மனிதா! எனக்கு பசி அதிகமாகிவிட்டது. எப்படியும் எனக்கு இரை வேண்டும், நீ கீழே வந்தால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டுவிடுவேன். ஆனால் நீ உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் சொல்கிறேன், உன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கி கொண்டு இருக்கிறது அதை நீ கீழே தள்ளி விடு நான் அதை சாப்பிட்டு விடுகிறேன், என் பசி தீர்ந்துவிடும் பிறகு நீ பிழைத்துவிடலாம் என்றது. தான் எப்டியும் உயரி பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன் தூங்கி கொண்டிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான், ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடிதுகொண்டது, கீழே விழாமல் தப்பியது. நடுங்கிப்போன மனிதன் அவனை அறியாமல் தன் கை கால் நடுங்கி கீழே அவனாகவே கீழே விழுந்து விடுவான் போல் இருந்தது. அப்போது கரடி நிதானமாக பேசியது. பயப்படாதே, இப்போதும் கூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாப படுகிறேன் தவிர, உன்னை பழி வாங்க நினைக்கவில்லை என்றது. நீ இப்படி செய்யலாம் என்று நான் எண்ணினேன் அதனால் முன்னேசிரிக்கையாக இருந்தேன் இப்போதும் கூட நான் உன்னை கொள்ள மாட்டேன் புலியிடம் தள்ளியும் விடமாட்டேன் என்றது. இதைக் கேட்டதும் மனிதன் தான் செய்த தவறை எண்ணி மிகவும் வருந்தி, கண்ணீர் விட்டான் மனிதன்!!!
மிருகத்திடம் இருக்கும் உயர்ந்த குணம் மனிதர்களிடம் இன்று அறவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதை சுட்டி காட்டவே இந்த கதை...

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

அவசரம்....!

காலைல 5 மணிக்கெல்லாம் எழுந்து அவசர அவரசமா குளிச்சிட்டு ஒரு கைல டிபன் பாக்ஸும் இன்னொரு கைல டீய வச்சு குடிசிகிட்டே சூவ மாட்டிகிட்டு ஆபிஸுக்கு கிளம்பி வந்தா ஒரே ட்ராபிக். எரிச்சலோட வண்டிய உருட்டிகிட்டே  எப்டியோ அடிச்சு புடிச்சு ஆபிஸ்ல வந்து சேர ஒரு கால் மணி நேரம் லேட் ஆகிருக்கும். அப்பாடான்னு  யார் கண்லயும் படாம   நைசா போய் சீட்ல உக்காந்து கொஞ்சம் ஹாயா  ஏசி காத்துல ரிலாக்ஸ் பண்ணிட்டு கம்ப்யுட்டர ஆன் பண்ணி ஏதாவது ஈமெயில் வந்து இருந்தால் பார்த்துட்டு அப்புறம் வேலைய ஸ்டார்ட் பண்ணுவோம்ன்னு இருந்தா, அப்டி பெருசா செய்றதுக்கு ஒண்ணுமே இல்ல, அட இதுக்கா இவ்ளோ அடிச்சி புடிச்சி வந்தோம்ன்னு நொந்துகிட்டே சரி ப்ளாக்லயாவது எதாச்சும் போடலாம்னு நெட் ஓபன் பண்ணலாம்னு பாத்தா, என்னோட சீட் நட்ட நடுல எல்லார் கண்ணுலையும் பட்ரமாரி வச்சுபுட்டனுவோ பாவி பய புள்ளைக. அதுனால நெட்ட கூட ப்ரீயா தொறந்து பார்க்க முடில. அதுனால எல்லாத்தையும் ஒரு பேபெர்ல எழுதி குட்டியா ஒரு விண்டோ ஓபன் பண்ணி கஷ்டப்பட்டு டைப் பண்ணி போட்டாச்சு. இந்த மாரி அனுபவம் யாருகாச்சும் இருந்தால் எப்டி நேரத்த வீனாக்குவீங்கனு பின்னூட்டத்துல சொல்லுங்க.... ரொம்ப மொக்கையா இருக்கோ??? ச்ச்சும்மா ஒரு ட்ரைதன்...

சனி, 10 ஏப்ரல், 2010

ஏமாற்று பேர்வழிகள்


இந்தியாவின்  இந்த +918326698100 நம்பரிலிருந்து இன்று எனக்கு ஒரு போன்  அழைப்பு வந்தது.  ஒரு பெண் மிக சரளமாக  நுனி நாக்கில் ஆங்கிலத்தில் பேசினால். Karma  Royal  Groupலிருந்து  பேசுவதாக சொன்னாள். அவர்கள் (GOA) கோவாவில் உள்ள பெரிய ஹோட்டல் என்றும், அங்கு சில சலுகைகள் வழங்குவதாகவும் ஒரு வார காலம் இலவசமாக  வி.ஐ.பி  வகுப்பில்  தங்குவதற்கான package  எனக்கு கிடைத்திருபதாகவும் சொன்னாள். அவள் மிக சரளமான ஆங்கிலத்தில் தேன்சிந்தும் வார்த்தைகளால்  பேசி கொண்டே மற்ற விவரங்களை எனது இமெயிலில் அனுப்புவதாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.  அவளுடைய ஆங்கில உச்சரிப்பில்  ஒரு முறையே  அந்த ஹோட்டல் பெயரை கேட்டு இருந்ததால், அதன் பெயர் எனக்கு  மறந்து போய்விட்டது. கொஞ்ச நேரம் யோசிச்சு  பார்த்தேன் பிடிபடவில்லை,  பிறகு  என் மொபைலை  எடுத்து அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது, welcome  to Karma  Grand  Royal என்று Automatic பதில் வந்தது. எனது அழைப்பை துண்டித்து விட்டு, Googleலில் சென்று மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்   என்று அந்த நம்பரை type செய்தேன், அப்போது அதிர்ச்சியான சில விவரங்கள் தெரியவந்தது. இவர்கள் துபாய் போன்ற நாடுகளில் கிடைக்கபெறும் தகவல்களை வைத்துக்கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள்.  இந்த பெயர் மற்றும் நம்பரிலிருந்து நிறைய பேருக்கு அழைப்பு வந்ததாகவும்,  இவர்கள் பொய்யர்கள் என்றும், இன்னும் (வெளி நாட்டிலிலிருந்து)  கோவாவுக்கு சுற்றுலா  வரும்  அப்பாவி மக்களை ஏமாற்றி மோசம் செய்வதுதான் இவர்களின் முழு நேர வலை என்றும், இவர்கள் பல பரிசுகள் மற்றும் Giftவௌசேர்(Voucher)கள் கொடுப்பதாக சொல்லி வசியமான சில வார்த்தைகளால்  அப்பாவிகளை  ஏமாற்றி, அவர்கள் வலையில் விழ வைத்து Resortக்கு கூட்டிச்சென்று பல நபர்களை அறிமுகம்  செய்து வைகிறார்கள், ஒவ்வருமாக    மூணு நாலு மணி நேரம் பேசி அவர்கள் கிளப்பில்  மெம்பராக  சேர சொல்கிறார்கள்,  அதெல்லாம் வேண்டாம் என்று நாம் ஒதுங்க முயன்று ஒதுங்கும்போது  வசியமான சில வார்த்தைகளை சொல்லி மடிய வைக்க முயற்சிக்கின்றார்கள், வேண்டாம், நான் போகிறேன் எனக்கு வாக்களித்த Gift வௌசெரை தாருங்கள் என்று சொன்னால், நாங்கள் அப்படி  ஒன்றும்  வாக்களிக்கவில்லை   என்று  சொல்கிறார்கள்.  எப்படியாவது அவர்கள் கிளப்பில் மெம்பராக்கிவிட   முயற்சிக்கின்றார்கள்.  ஒத்துவரவில்லை என்றல் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள்.  எனவே இவர்களைப்  பற்றி Consumer Complaintஇல்  என்ன  சொல்லப்படுகிறது   என்று பாருங்கள். இது போன்ற அழைப்பு உங்களுக்கும் வந்தால் அவர்களிடம்  தொடர்ந்து எதுவும் பேசாமல் உடனே அழைப்பை துண்டித்துவிடுங்கள்.
Karma Royal Resorts
Posted: 2009-06-12 by R K Arora Send email
Cheating innocent visitors coming to Goa
By this piece of complaint I want to warn unsuspected travellers who waste their precious holiday time and are being cheated by this so called cheat comapny called Karma Royal Group.

The modus operandi is that travellers moving aroung Goa on Holidays are approached by their agents (whom they themself call kidnapper) giving lure of prize vouchers containg false promises on free stay, ipod, restaurant vounchers, boating trips etc. They convince the unsuspected travellers that they are just promoting their resorts and want to publicise the same by providing free stays etc. and would like to take them to show the resort .
Once the traveller who has come to Goa on holiday by spending money on travel and hotels etc. falls into their trap of free stay and other instant prizes to be given and agrees to come along with them, he is picked by the kidnapper and taken to their resort.
Once you are there, without any consideration their actors just start playing drama introducing different persons and you are made to sit with your entire family for listening their non-stop commentary on resorts, time share plans, how you are wasting your life without joing them and other type of brain washing exercises. After 2-3 hours of non stop commentaries by different digfferent persons they start presurrising you to agree to take their membership which costs 3-4 lakhs.
The real colous appear when you refuse to take that bullshit and asks for the prizes promised. Than comes some bouncer type persons in picture who would inform you that you are not entitled for any of the instant prizes and you should just take a voucher, which you obviously would not be able to use and leave.
If you demand your promised prize they imkeditaely start misbehaving.
By the time you learn your mistake you had already lost your one day for which you had paid money to your hotel and you had come so far away from your home to enjoy holidays.
Despite being aware of such cheats I myself became their victim when they assured me that I should just listen to their resort promotion for one hour and I would be provided free stay immediately after that, than and there.
But when I demanded the assured prize I was told restaurent is closed, boat trip timings are over, free stay only with 2 months advance booking and like that. That bugger became so rude and abusive when I started protesting.
So beware of Karma Royal Group and its fraudsters moving around Goa.
You can imagine what kind of service this CHEAT KARMA ROYAL GROUP might be providing to its members.

Source: http://www.consumercomplaints.in/complaints/karma-royal-resorts-c197241/page/1.html#c440008

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

அலெர்ட்!!!

நானும் தங்கமணியும் வாராவாரம் கலாச்சார மையத்துக்கு போவது வழக்கம். அங்கு  நண்பர் ஒருவர் தன் மகளுக்கு நடந்த சம்பவம் பற்றி சொன்னார். அவரோட பொண்ணு  ஒரு காயின வாயில வச்சி விளையாடிக்கிட்டு இருந்திருக்கு,  பின்னால் தன்  தங்கை வந்து எதேச்சையாக கையை தட்ட, அந்த  காயின் வாய் உள்ள போயிடுச்சு. நண்பர் பயந்து போய் உடனே  டாக்டர்கிட்ட போனா, அவர் பயப்பட வேணாம் வயத்துகுள்ளதான் இருக்கு. கக்கா... போனா எல்லாம் சரியாயிடும்-னு சொல்லிட்டார்.
 
குட்டீஸ் வச்சி இருக்கவங்க ரொம்ப அலெர்ட்டா இருக்கணும். அவங்களுக்கு சொன்னாலும் புரியாது, நமக்கும் அவங்கள மட்டுமே பார்த்துக்கிட்டு இருக்க முடியாதுல  SO PREVENTION IS BETTER THAN CURE
 அதுக்காக எனக்கு தெரிஞ்ச  சில டிப்ஸ் இதோ...

1, நாம ரொம்ப புத்திசாலி தனமா கெரோசின், ஆசிட் மாதிரி டேன்ஜரஸ் ஐட்டத் தைய்யலாம் தண்ணி பாட்டில்ல ஊத்தி வச்சிருப்போம். அத உயரமான எடத்துல வைக்கணும். கூடவே அதோட பெயர் எழுதி வைக்கலாம்.


2, அத மாதிரி நாம சோம்பேறித்தனத்துக்காக உட்கார்ந்துகிட்டே லைட் போட்ற மாதிரி, படுத்துக்கிட்டே அயன் பண்ற மாதிரி  கைக்கு எட்ர மாதிரி ப்ளக் பாயிண்ட்ஸ் வச்சிருப்போம். அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது. இருந்தாலும் குட்டீஸ் வளர்ற வரைக்கும் அலர்ட்டா இருக்கனும் அப்டி இல்லேன யூஸ் ஆகாத பிளக் பாயிண்டுக்கு tape ஒட்டி வைக்கலாம் அல்லது மூடி போடலாம்.  அது பக்கம் போக விடாம ஏதாவது திங்க்ஸ் போட்டு அடைச்சிடலாம் (அனுபவம்)



3, கத்தி, அரிவாள்மனை இதைலாம் குட்டீஸ் கை பட்ற எடத்துல வைக்க கூடாது. அதுமட்டும் இல்லாம ஊக்கு, பட்டன் காயின் மாதிரி முழுங்குற மாறி திங்க்சலாம் அங்க அங்க போட கூடாது.


4, இன்னொரு முக்கியமான விஷயம் இப்ப வெயிட் லெஸ் ஸ்டூல், சேர்லாம் வந்துடுச்சு. குட்டீஸ் ஈஸியா தூக்கிட்றாங்க அத தூக்கிட்டு போய் ஜன்னல எட்டி பாக்கறது, வாஷிங் மெசின எட்டி பாக்கறது, ஸ்டவ் பக்கதுல வந்து நிக்கறது. இந்த மாதிரி டேன்ஜரஸ் வேலைலாம் செய்றாங்க .ஒன்னு ஸ்டூல எங்கயாவது எடுக்க முடியாம போடுங்க .இல்லேனா குட்டிஸ கவனமா பாத்துக்குங்க.













டிஸ்கி: என் குட்டி பொண்ணு சுட்டி ஆயிட்டதால இந்த பதிவ எனக்கே டெடிகேட் பண்ணிக்றேன்

வேற ஏதாவது டிப்ஸ் தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க... தாங்க முடியல...  

திங்கள், 8 பிப்ரவரி, 2010

வானமே எல்லை!

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை. நண்பர் ஒருவர் இமெயிலில் அனுப்பினார். படித்தேன் எதையோ உணர்த்துவதாய்  உணர்ந்ததால் பதிகிறேன்...
கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுல் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும். அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, "ஆ! அம்மா!! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் " என்று தீர்மானித்துக் கொள்ளும். அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும். சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை. ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும். இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை. வலி இல்லை.  அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும். அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும். இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்தவுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள். இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை. ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, கொஞ்சம் புது முயற்சி செய்து இருந்தால்...
அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும். ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும். நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். முயற்சி செய்வதை கைவிட்டு விடுவது உண்டு. இல்லாத வேலியினுல், எதிலும் இடிக்காமல், வீணாக எந்த புது முயற்சியிலும் ஈடுபடமால், இது தான் விதி என்று, வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாம், அந்த ஒரு இன்ச் தூரத்தை தாண்டி விட்டால்... வாழ்க்கையில் நாம் சாதனை புரிய ...  வானமே எல்லை !

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

பாலைவன பாறைகளில்...

வார விடுமுறைக்காக இந்த தடவை ஒரு நீண்ட பயணம் சென்று இருந்தேன். வழிகளில் ஒரு புறம் பாலைவனமாக காட்சியளித்தாலும் மற்றொரு பக்கம் ஒரே பாறைகளாவகவே இருந்தது. அதில் சில பாறைகளில் மெல்லிய பச்சையாக புள் முளைத்து பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், முன்பெல்லாம் இந்த வழியாக செல்லும்போது வெறும் காஞ்ச பாரைகளாகவேதான் பார்த்ததுண்டு, ஆனால் இப்போது இங்கே கூட பசுமையாக காட்சி அளிப்பது ரொம்பவும் வியப்பாகவே இருந்தது. (ஒரு வேலை பேமிலியோட   போனதாலையோ!) அதிலும்  அந்த  பாறைகளின் உச்சியில் ஒட்டகங்கள் அப்படியே கூட்டம் கூட்டமாக ஏறி செல்வதைக் கண்ட காட்சி இன்னும் என் கண்களிலிருந்து மறையவில்லை... அதில் சில படங்கள் இதோ!!
மலை உச்சியில் ஒட்டக கூட்டம் (படத்தில் கிளிக் செய்து பார்க்கவும்)
   

 புதிய படங்கள்


பழைய படங்கள்
  
  

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சிகரட்டில் உள்ள நச்சு பொருட்கள்...


ஒருவர் புகைப்பதால் உதடு, நாக்கு, வாய், உமிழ் நீர்ச் சுரப்பிகள் (salivary glands), மூச்சுக்குழலின் மேற்பகுதி (larynx), தொண்டையிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் குழாய் (esophagus) மற்றும் அதன் நடு இறுதிப் பகுதி புற்று நோய் தோன்றும் பகுதிகளாகும். வயிற்றுப் புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய், அறிகுறி தென்பட்டாலே அது புகையுறிஞ்சியால் வந்த வினை என்று தெரிந்துகொள்ளலாம். புகையுறிஞ்சலுக்கும் லுக்கேமியா என்ற வியாதிக்கும் மிகுந்த தொடர்புள்ளது.

புகைப்பழக்கமில்லாத பெண்ணை விட, புகையுறிஞ்சும் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு முன்பாகவே மாதவிலக்கு நின்றுவிடும் அபாயம் ஏற்படும். புகையுறிஞ்சும் பழக்கமுள்ள பெண்களுக்கு நிகோடின் நச்சு ஹார்மோன்கள சுரப்பிகளைச் செயலிழக்க வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எலும்பு உறுதியற்ற அல்லது எளிதில் உடைந்துவிடுகின்ற தனமையையும் (osteoporosis) ஏற்படுத்தும்.

இவ்வளவு கேடுகெட்ட இந்த சிகரட்டை உடனடியாக (முடியாவிட்டாலும்) முயற்சி செய்து விட்டுவிட வேண்டும்... இதில் உள்ள தீமைகள் பற்றி எல்லாம் தெரிந்தும் அந்த செயலை செய்யும்போது அது தற்கொலைக்கு சமமாக ஆகி விடுகிறது... அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பற்றுவனாக!

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். அல்குர்ஆன் 4: 29)நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைபிடியுங்கள். இன்னல்களைச் சகித்துக் கொள்ளுங்கள் அல்குர்ஆன்: 3:200

சனி, 9 ஜனவரி, 2010

முஸ்லிம் மானவர்களுக்குகாக...

அஸ்ஸலாமு அழைக்கும்


படிக்க ஆசை இருந்தும் வசதி இல்லாத இஸ்லாமிய மாணவர்களுக்கு இந்த தகவல் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
கீழே  கொடுக்கப்பட்டுள்ள  நிறுவனங்கள் இஸ்லாமிய மாணவர்களுக்கு மேற்படிப்பிற்காக சலுகைகள் மற்றும் படிப்புதவி வழங்குகிறார்கள்.
Aamir Mustafa Kidwai Trust

Contact Person: Mrs Aziza Kidwai
B-28, West End Colony, New Delhi - 110021; Tel. 011-24670009, Mob: 09868679107

Scheme: Financial assistance & scholarships for pursuing higher studies to needy and meritorious persons belonging to educationally backward minorities.

Aaghaz Educational Foundation
Scholarship Forms for both Post Metric and Pre Metric school going children
4th Floor, Bank of India Bldg, (next to Ram Asrey Sweet Shop), Shahnajaf Road , Lucknow - 226001
Tel: 9335902671, 9415020212
Aga Khan Education Service, India
Aga Khan Education Service, India
C/o Diamond Jubilee High School for Boys

Aga Hall Compound
Mazagaon
Mumbai 400010
Tel: (22) 23731811 / 23731701 / 23731852
Fax: (22) 23731488
Email: admin@akesi.org


Aga Khan Foundation ( UK )
Aga Khan Foundation, Sarojini House, 6 Bhagwan Das Road , New Delhi 110001
Scheme: University study in the UK for grad and post grad programmes

Agha Khan Program for Islamic Architecture, The Massachusetts Institute of Technology,
77, Massacuhsetts Ave. Vomm 7-238, Cambridge M A 02139-4307 USA
Scheme: Three scholarships awarded every year for research & investigation in Architecture of the Muslim world.

Ajmal Foundation
Scholarships through Ajmal Talent Search Examination (Class III to XII); Apply by September end each year to appear in the exam. ( Assam students only)

Secretary, ATS Examination, College Road , Hojai, Nagaon , Assam - 782435, India ,Tel. 03674-254514, Fax: 253199, Mob: 9435062706 http://www.atseassam.org/

E_mail: info@atseassam.org


Al-Ameen Charitable fund Trust Super tannery (I) Ltd.
Jajmau Road, Jajmau, Kanpur - 208 010 (U.P.)
Scheme: Post Metric Scholarship for higher education



Al-Ameen Welfare Society
Zakat scholarships to deserving poor Assamese Muslim students. Deserving post matriculation students already admitted to educational institutions are eligible. There is no last date for application as these are given as long as the funds last.
Contact: K.Z.N.AHMED, 21 Bagharbari Road , Panjabari, Guwahati-781037, Assam


Al-Ameen Scholarship Trust (R)
Ground Floor, Al-Ameen College Campus,
Near Lalbagh Main Gate, Hosur Road ,

Bangalore - 560027. Phone: 080-2223 5626 Extn. 759


All India Talent Identification And Promotion Trust
#7, SRK Garden, Jayanagar (E), Bangalore-41 Tel. 080-56969672, 6646861

Email: admin@aitipt.org; aitipt@yahoo.co.in Web: www.aitipt.org


American Alumni Association
Vulcan Insurance Building , 1st Floor
Veer Nariman Road
Church Gate - Mumbai 400 020 , Tel: (022) 2282 1413, 2282 1485


Apex Life Scholarship,
The Coordinator (SCI Deptt.)
APEX Life International, No. 250, First Floor,
Sant Nagar, East of Kailash, New Delhi - 110065
APEX Life Scholarships for the school and college students for higher studies in India and overseas.


Assam Government Scholarships
Contact: Deputy Secretary, Government of Assam , Education Department (CTM), Kahalipara ,
Assam Study programme: Postgraduate study Applicant profile: Residents of Assam
Asma Foundation (Regd) Hospital Road Distt. Madhubani, Bihar 847211


B. D. GOENKA FOUNDATIONAddress: Express Building , Bahadur Shah Zafar Marg, New Delhi - 110002
Scholarship for Photography & Journalism
Amount covers Rs 1,00,000/- each and a Citation


The Barakat Trust ( UK )

The Oriental Institute, The University of Oxford

Oxford OX1 2LG , Tel: 00 44 (0) 1865 278069
Fax: 00 44 (0) 1865 278228, http://www.barakat.org/grants.php

Bharat Petroleum Scholarships
Eligibility: Indian citizen, holding a degree from a recognised university and residing in India at the time of application, and who have secured at least 65% in Arts and 70% in Engineering, Science or Commerce at the Graduate level. The applicant should be below 25 years as on first of September.
Students with confirmed admission to any full time, two years Post Graduate Degree Course (in any field of education other than fine arts), at any recognised University / Institute of repute in India or abroad.
http://www.bharatpetroleum.com/scholarship/

Central Wakf Council
14/173, Jam Nagar House, Shahjahan Road , New Delhi -110011; Tel. 23384465; Fax. 23070881; Email: central_wakf_council@vsnl.net Web: http://www.wbmdfc.org/wakf/index.html
Criteria: Father ' s Annual income not more than Rs 75000.00 per annum.
Scheme: Scholarship to students of B.E., M.B.B.S, B.D.S, B.Sc., A.M.D.Sc (Alig), M.B.A., M.Sc., L.L.B., Scholarship Rs 6000.00 per annum

The Children Foundation
Students studying from the V to the XII standard

Post Box No -5007, Chennai - 600090 Tamil Nadu

info@childrenfoundation.net
Activities mainly in the state of Kerala Provide scholarship for academically excellent student who lack the financial freedom in choosing and building their career
http://www.childrenfoundation.net/apply.html


Crescent Educational Foundation
B.61 C K Road , Chanpatana, Bangalore Dist.Karnataka, email : crescent@asia.com ; Tel ++91-80-7251143 / 54443; Mobile +91-9844143530; PRO: Mr. Syed Ajmal
Criteria : Students from Muslim community (irrespective of any school of thought) but he/she must be from Chanpatana city only Scheme: Scholarship to students of professional courses.


Danish Educational Trust (R)
Only for boys from Bangalore
No. 85, Sheriff House, Richmond Road ,
Next to Karnataka State Hajj Committee Office, Bangalore - 560025.
danishtrust@gmail.com Tel. 080 – 41121281


Debesh-Kamal Scholarships
Indian students who wish to pursue higher studies or research abroad. The scholarship is for a maximum period of 1 year and the amount is approximately rupees 1 lakh.
Eligibility: Not be more than 30 years of age and should have a good academic record with a first class graduate degree. They should also have been offered a place in a university program before they apply for the scholarship.
Application: For application forms apply to: The Secretary, Ramakrishna Mission Institute of Culture,
Gol Park , Kolkata - 700 029 West Bengal, Phone: 033 2464 1303, 2466 1235; Email : rmic@vsnl.com

Delhi Wakf Board
Near Bachchon Ka Ghar, Daryaganj, Delhi – 110006
Dr. Ambedkar Foundation
Scholarship for Overseas Fellowships for Postgraduates, Doctoral, Research in Law, Economics, Sociology, International Relations
Eligibility : Bachelor/Master Degree in the relevant field
Notification : See employment News
Address : Dr. Ambedkar Foundation, 25, Ashoka Road , New Delhi - 110001


Dr. Zakir Hussain Memorial Trust
4, Gul Mohar Avenue , Jamia Nagar, New Delhi-110025
Erasmus Mundus Scholarship
The scholarship is for students who wish to pursue a Masters at Universities in either Germany and Portugal or Germany and France . The scholarship covers the entire duration of the Masters program.
http://europa.eu.int/comm/education/programmes/mundus/index_en.html


Fadel Educational Foundation, Inc.
FEF, Inc., is a non-profit educational foundation supporting education for Muslim U.S. citizens and permanent residents only. The awards are distributed on a need/merit basis.
P.O. Box 212135 , Augusta , GA 30917-2135 USA
http://www.fadelfoundation.org/


Foundation for Academic Excellence and Access (FAEA)
B-41, Qutab Institutional Area, New Mehrauli Road , New Delhi - 110 016, Phone: 2696 4290, 2696 5211 Fax: 2696 4580, E-mail: inquiry@faeaindia.org
Criteria: Undergraduate studies in Arts / Commerce / Science / Medical / Engineering and other technical and professional discipline at any University / Institution / College of students choice anywhere in India .
Eligibility: 1. Indian Nationals. 2. Students who are currently in Class XII or have passed Class XII from a recognised board in India . Those in the 1st year of the undergraduate course (any discipline) are also eligible to apply.
Scope: Tuition fee, maintenance allowance or hostel/mess charges and other allowances to cover travel, clothing and books. Scholarships are tenable up to a maximum of five years. All grants are renewed annually based on Scholars good academic performance.
How to apply: Use form available at http://www.faeaindia.org/


Fulbright Fellowships For Indian Citizens
USEFI - Fulbright fellowship programs for Indian academics and professionals to go to the United States for periods ranging from two to twelve months

http://www.fulbright-india.org/fellowships/indians/indgen.htm  


Foundation for economic and educational development gives scholarships for Higher education

1-8-353 to 355, Begumpet, Besides HUDA Office, Secunderabad - 500 003, A.P., India

Phone Nos. (++91) (40) 27907680 / 27901426 Fax: (++91) (40) 27901239

Web site: www.feed-hyd.org E-mail: support@feed-hyd.org


Foundation for Social Care
Director, Scholarship programme: Ziaur-Rahman Siddiqui
185/A Johari Farm, Jamia Nagar, New Delhi 110 025. Tel.: (011) 26317311; fsc_admin@rediffmail.com
fscscholarship@yahoo.co.in; http://www.fscwecare.org/

திங்கள், 4 ஜனவரி, 2010

அந்த ஏழு நபர்கள்...

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான்.
  1. நீதியான அரசன்,
  2. அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், 
  3. பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன்,
  4. இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்,
  5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர்,
  6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்,
  7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
1. நீதியான அரசன்:
அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.

2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்
வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.

3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்
பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது.

4.இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்
இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும். யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

5.நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர் (ஒதுங்கிக் கொண்டவர்)
காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார்.

6.வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்
இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும். மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி) பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது. அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!

குறிப்பு: நட்புடன் கருத்துரைத்தைக் கருத்தில் கொண்டு இங்கு அவசியமில்லாத சில விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் கல்வியிலிருந்து...