நானும் தங்கமணியும் வாராவாரம் கலாச்சார மையத்துக்கு போவது வழக்கம். அங்கு நண்பர் ஒருவர் தன் மகளுக்கு நடந்த சம்பவம் பற்றி சொன்னார். அவரோட பொண்ணு ஒரு காயின வாயில வச்சி விளையாடிக்கிட்டு இருந்திருக்கு, பின்னால் தன் தங்கை வந்து எதேச்சையாக கையை தட்ட, அந்த காயின் வாய் உள்ள போயிடுச்சு. நண்பர் பயந்து போய் உடனே டாக்டர்கிட்ட போனா, அவர் பயப்பட வேணாம் வயத்துகுள்ளதான் இருக்கு. கக்கா... போனா எல்லாம் சரியாயிடும்-னு சொல்லிட்டார்.
குட்டீஸ் வச்சி இருக்கவங்க ரொம்ப அலெர்ட்டா இருக்கணும். அவங்களுக்கு சொன்னாலும் புரியாது, நமக்கும் அவங்கள மட்டுமே பார்த்துக்கிட்டு இருக்க முடியாதுல SO PREVENTION IS BETTER THAN CURE
அதுக்காக எனக்கு தெரிஞ்ச சில டிப்ஸ் இதோ...
1, நாம ரொம்ப புத்திசாலி தனமா கெரோசின், ஆசிட் மாதிரி டேன்ஜரஸ் ஐட்டத் தைய்யலாம் தண்ணி பாட்டில்ல ஊத்தி வச்சிருப்போம். அத உயரமான எடத்துல வைக்கணும். கூடவே அதோட பெயர் எழுதி வைக்கலாம்.
2, அத மாதிரி நாம சோம்பேறித்தனத்துக்காக உட்கார்ந்துகிட்டே லைட் போட்ற மாதிரி, படுத்துக்கிட்டே அயன் பண்ற மாதிரி கைக்கு எட்ர மாதிரி ப்ளக் பாயிண்ட்ஸ் வச்சிருப்போம். அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது. இருந்தாலும் குட்டீஸ் வளர்ற வரைக்கும் அலர்ட்டா இருக்கனும் அப்டி இல்லேன யூஸ் ஆகாத பிளக் பாயிண்டுக்கு tape ஒட்டி வைக்கலாம் அல்லது மூடி போடலாம். அது பக்கம் போக விடாம ஏதாவது திங்க்ஸ் போட்டு அடைச்சிடலாம் (அனுபவம்)
3, கத்தி, அரிவாள்மனை இதைலாம் குட்டீஸ் கை பட்ற எடத்துல வைக்க கூடாது. அதுமட்டும் இல்லாம ஊக்கு, பட்டன் காயின் மாதிரி முழுங்குற மாறி திங்க்சலாம் அங்க அங்க போட கூடாது.
4, இன்னொரு முக்கியமான விஷயம் இப்ப வெயிட் லெஸ் ஸ்டூல், சேர்லாம் வந்துடுச்சு. குட்டீஸ் ஈஸியா தூக்கிட்றாங்க அத தூக்கிட்டு போய் ஜன்னல எட்டி பாக்கறது, வாஷிங் மெசின எட்டி பாக்கறது, ஸ்டவ் பக்கதுல வந்து நிக்கறது. இந்த மாதிரி டேன்ஜரஸ் வேலைலாம் செய்றாங்க .ஒன்னு ஸ்டூல எங்கயாவது எடுக்க முடியாம போடுங்க .இல்லேனா குட்டிஸ கவனமா பாத்துக்குங்க.
டிஸ்கி: என் குட்டி பொண்ணு சுட்டி ஆயிட்டதால இந்த பதிவ எனக்கே டெடிகேட் பண்ணிக்றேன்
வேற ஏதாவது டிப்ஸ் தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க... தாங்க முடியல...
ஒன்னே ஒன்னுக்கே இப்படியா;), நல்ல டிப்ஸ்
பதிலளிநீக்குமச்சான் நீ இம்புட்டு பொறுப்பான அப்பாவா பதிவு போடுவதை பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு...
பதிலளிநீக்குtake of the cute lil sweet heart...
ஆகா குட்டி சுட்டியாட்டி இதெல்லாம் நடக்கும்தான்
பதிலளிநீக்குபொறுப்பான தந்தை.
நல்ல இடுகை..
//Nice post..\\ வருகைக்கு நன்றி இர்ஷாத்...
பதிலளிநீக்குஅன்புடன் மலிக்கா சொன்னது…
பதிலளிநீக்கு//ஆகா குட்டி சுட்டியாட்டி இதெல்லாம் நடக்கும்தான்
பொறுப்பான தந்தை நல்ல இடுகை..\\
நன்றி சகோதரி...
//ஒன்னே ஒன்னுக்கே இப்படியா;), நல்ல டிப்ஸ்//
பதிலளிநீக்குஆமா மச்சான் செம சேட்டை .ரொம்ப சுட்டியாகிட்டாங்க.
//மச்சான் நீ இம்புட்டு பொறுப்பான அப்பாவா பதிவு போடுவதை பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு...
பதிலளிநீக்குtake of the cute lil sweet heart...//
thanks machan
டிஸ்கி ஜூப்பருங்க,
பதிலளிநீக்குநீங்க சொன்ன டிப்ஸும் அதை விட ஜூப்பரு, குழந்தைகள் விஷியத்திலெப்போதும் கண்ணில் விளக்கெண்ணைய ஊற்றி கொண்டு விழித்திருக்கனும்.
வாங்க நம்ம பக்கமும் குழந்தைகளுக்கென நிறைய பதிவுகள் இருக்கு, முடிந்த போது வாங்க..
நன்றி ஜலீலா அக்கா.இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வந்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு//குழந்தைகள் விஷியத்திலெப்போதும் கண்ணில் விளக்கெண்ணைய ஊற்றி கொண்டு விழித்திருக்கனும்.//
கருத்துலேயே தெரியுதே