மே 1 உழைப்பாளர் தினம்: எல்லா உழைப்பாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
தலைப்பு மே 1ன்னு வச்சுட்டு, 2ம் தேதி இந்த மேட்டர சொல்றதுக்கு மன்னிக்கவும், நேரம் கிடைக்காததே இந்த லேட் பதிவுக்கு காரணம். சரி விசயத்துக்கு வருவோம்.
எல்லா உழைப்பாளர்களுமே கடின உழைப்பாளிகள்தான் என்றாலும் முக்கியமாக கட்டிடம் கட்டும் பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள், ,....
போன்ற கடின உழைப்பாளிகளை நினைவு கூர்ந்து, அவர்களது உழைப்பின் கடினத்தை உணர்ந்து நம்முடைய நிலைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். அல்ஹம்துலில்லாஹ்!
அதோடு இந்த உழைப்பாளர் தினம் எப்படி வந்தது? என்று சில நாட்களுக்கு முன் படித்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அந்த காலங்களில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு நேர வரைமுறை இல்லை. வேலைக்கு போனால் வீடு திரும்பும் நேரம் தெரியாது. தொடர்ந்து ஓய்வே இல்லாத வேலை. இந்த நிலையை மாற்றி, 8 மணி நேர வேலையை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. அதில் முக்கியமானது அமெரிக்க தொழிலாளர்களின் போராட்டம்தான். 1886ல் பல்வேறு மாகாணங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள் ஒன்றிணைந்து ''அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை உருவாக்கினர். மே 1 வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்கா முழுவதும் 3 லட்சம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர். தொழிற்சாலைகள் திணறின. மே 3 சிகாகோவில் ''மெக்கார்மிக் ஹர்வேச்டிங்(harvesting) மெசின்'' கம்பெனியில் 3000 பேர் தொடர் முழக்க போராட்டம் செய்தனர். அந்த போராட்டம் கலவரமாக மாறி 4 பேர் காவலர்களால் பலி ஆனார்கள். இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்கள் இதை கண்டித்து ஹே மார்க்கெட்-ல் கண்டன கூட்டம் நடத்தினர். இதிலும் கலவரம். ஒரு காவலர் பலியானார்.
இதையடுத்து தொழிலாளர் தலைவர்கள் அகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பர்ட் பர்சன்ஸ், அடால்ப் பிஷர் ஜார்ஜ் ஏஞ்சல் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 1887 நவம்பர் 11ல் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இப்படி தொழிலாளர்கள் உயிர் தியாகம் செய்து கிடைத்ததுதான் நாம இப்ப பார்த்துகிட்டு இருக்கிற இந்த 8மணி நேர வேலை.
இந்த போராட்டத்தை நினைவு கூறுவது தான் மே 1 உழைப்பாளர் தினம்
சேகரித்து பல புதிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குWe've got 8 hours duty time, thats why we celebrate this day nu nenacha... iwlo thiyagam pannirukaanglaa... great...
பதிலளிநீக்குAlhamdhulillah... v're really blessed...
good articles
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி மச்சான்
பதிலளிநீக்குalhamdulilah
பதிலளிநீக்குthanks for ur comments machan
thanks for visiting my blog ABU NADEEM
பதிலளிநீக்குKEEP N TOUCH
தாமதத்திற்கு மன்னிக்கவும்
பதிலளிநீக்குப்ளாகுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.இன்றைக்கு தான் குணமடைந்தது