அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

வியாழன், 20 மே, 2010

டீ....

உலகில்  அதிகமான மக்கள் நான் விரும்பி குடிக்கிறததான் விரும்பி குடிக்கிறாங்கலாம் அதான்பா டீ யை  தான் சொல்றேன். அதை பற்றிச் சில சுவையான தகவல்கள்

  • இதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் குணம் டீக்கு உண்டாம்.

  • தென்னிந்தியாவில் குன்னூர், இடுக்கி வயநாடு, வால்பாறை, மூணார், கூடலூர் பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயம் தான் பிரதான தொழில்.

  • டீ தூளின் எடையை கூட்ட கலப்படம் செய்யிறாங்களாம் அதுக்கு அவங்க புட் கலர் சேர்கிறாங்கலாம். புட் கலரா இருந்தாலும் சட்ட விரோதமானதும், உடல்நலத்துக்கும் நல்லதில்லையாம்.

  • இந்த கலப்பட டீயைக் கண்டு பிடிக்க ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் கொஞ்சம் போட்டு பார்க்கணுமாம். தண்ணீரில் கலர் பட்டிபட்டியாக இறங்கினால் அது கலப்படத் தேயிலை. நிறம் மாறாவிட்டால் கலப்படம் இல்லாதது. அதே போல் ஒரு பிளாஸ்டிக் பேப்பரின் மேல் ஒரு சிட்டிகை டீத்துளை பரப்பி அதன் மேல் நான்கைந்து சொட்டு தண்ணீரை விடணுமாம் பேப்பரின் நிறம் மாறினால் அது கலப்படம்.
ஒவ்வொரு ஊர் டீயும் ஒவ்வொரு கலர்.










நீலகிரி டீ ஆரஞ்சு கலர்








கென்யா டீ அடர் சிவப்பு




 







அஸ்ஸாம் டீ டார்க் பிரவுன்









டார்ஜிலிங் டீ தாமிர நிறம்

  • நீரை கொதிக்க வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து அதில் டீத்தூளை போட்டு 2 நிமிடம் கழித்து வடிகட்டி அப்படியே ப்ளாக் டீயாகவோ, பால் சேர்த்தோ குடிக்கணுமாம்.இதுதான் சரியான முறை.பாலிலோ, நீரிலோ டீத்தூளை போட்டு அது நிறம் மாறும் வரை கொதிக்க வைத்து குடித்தால் டீயின் ஒரிஜினல் சுவையை உணர முடியாதாம்

  • எல்லாத்துக்கும் மேல காஸ்ட்லி டீன்னு வேற இருக்குதாம். சில்வர் டீ, ஒயிட் டீ, பிராஸ் டீ ,...... இதெல்லாம்  ஹைகிளாஸ் மக்கள் விரும்பி குடிக்கிற டீயாம்.இதுல என்ன ஸ்பெஷல்னா சாதாரன டீ தூளில் 2 இலைகள் 1 மொட்டு சேர்த்து பறிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு தயாரிக்கபட்டால். இந்த காஸ்ட்லி டீ க்கு வெறும் மொட்டுகளை மட்டும் பறித்து,கைகளாலேயே கசக்கப்பட்டு, வெயிலில் உலர்த்தி தயாரிக்க படுதாம். 1கிலோ தேயிலையின் விலையே ஆயிரத்தை தாண்டிதானாம். 

ஞாயிறு, 2 மே, 2010

மே 1

             
மே 1 உழைப்பாளர் தினம்: எல்லா உழைப்பாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.    
தலைப்பு மே 1ன்னு வச்சுட்டு, 2ம் தேதி இந்த மேட்டர சொல்றதுக்கு மன்னிக்கவும், நேரம் கிடைக்காததே இந்த லேட் பதிவுக்கு காரணம். சரி விசயத்துக்கு வருவோம்.
எல்லா உழைப்பாளர்களுமே கடின உழைப்பாளிகள்தான் என்றாலும் முக்கியமாக  கட்டிடம்  கட்டும் பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள், ,....

போன்ற கடின உழைப்பாளிகளை நினைவு கூர்ந்து, அவர்களது  உழைப்பின் கடினத்தை உணர்ந்து நம்முடைய நிலைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். அல்ஹம்துலில்லாஹ்!

அதோடு இந்த உழைப்பாளர் தினம் எப்படி வந்தது? என்று சில நாட்களுக்கு முன்  படித்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அந்த காலங்களில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு நேர வரைமுறை இல்லை. வேலைக்கு போனால் வீடு திரும்பும் நேரம் தெரியாது. தொடர்ந்து ஓய்வே இல்லாத  வேலை. இந்த நிலையை மாற்றி, 8 மணி நேர  வேலையை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. அதில் முக்கியமானது அமெரிக்க தொழிலாளர்களின்  போராட்டம்தான். 1886ல் பல்வேறு மாகாணங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள் ஒன்றிணைந்து ''அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை உருவாக்கினர். மே 1 வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்கா முழுவதும் 3 லட்சம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர். தொழிற்சாலைகள் திணறின. மே 3 சிகாகோவில் ''மெக்கார்மிக் ஹர்வேச்டிங்(harvesting) மெசின்'' கம்பெனியில் 3000 பேர் தொடர் முழக்க போராட்டம் செய்தனர். அந்த போராட்டம் கலவரமாக மாறி 4 பேர் காவலர்களால் பலி ஆனார்கள். இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்கள் இதை கண்டித்து ஹே மார்க்கெட்-ல் கண்டன கூட்டம் நடத்தினர். இதிலும் கலவரம். ஒரு காவலர் பலியானார்.                                              
இதையடுத்து தொழிலாளர் தலைவர்கள் அகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பர்ட் பர்சன்ஸ், அடால்ப் பிஷர் ஜார்ஜ் ஏஞ்சல் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 1887 நவம்பர் 11ல் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இப்படி தொழிலாளர்கள் உயிர் தியாகம் செய்து கிடைத்ததுதான் நாம   இப்ப பார்த்துகிட்டு இருக்கிற இந்த 8மணி நேர வேலை.
இந்த போராட்டத்தை நினைவு கூறுவது தான் மே 1  உழைப்பாளர் தினம்