அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

சனி, 12 ஜூன், 2010

ஒப்பீடு... Comparison

உலகத்துல யார பார்த்து இத கேட்டாலும், இப்புடித்தான் சொல்லுவாங்க. எப்டிங்க இருக்கீங்க? அட அத ஏங்க கேக்குறீங்க, அவன பாருங்க எப்டி சந்தோசமா இருக்கிறான், நானும் அவனும் ஒன்னதான் வெளிநாடு வந்தோம் அவன் எங்கயோ போய்ட்டான். நானும் என்னலாமோ பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆவமாட்டேங்குது. எனக்கு மட்டும்தான் இப்டிலாம் நடக்குது. இப்படி சலிதுகொள்ளும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்கத்தான் செய்கிறோம். அங்க ஊட்டு கார அம்மாகிட்ட கேட்டா எனக்கும்தான் வந்து வச்சிதே, எதித்த ஊட்டு காரர பாருங்க, வெளிநாடு போய் 2 வருசம்தான் ஆவுது இன்னைக்கு காரு பங்களான்னு செல்வ செழிப்போட சந்தோசமா இருகாங்க. (என்னவோ கூடவே இருந்து பார்த்தமாரி), இந்த மனிசனும்தன் இருக்காரு போயி 15 வருஷம் முடியபோவுது என்னத்த கட்டி முடிச்சாரு. இப்படி ஒவ்வொருவரும் அடுத்தவர்களை பார்த்து ஒப்பீடு செய்யும்போது இவர்களின் சந்தோஷம், நிம்மதி எல்லாமே தொலைந்து விடுகிறது. சமீபத்தில் பத்திரிக்கைல ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டு இருந்தாங்க. அடுத்தவர்களுடைய சம்பளத்தை ஒப்பீடு செய்வதால் நிம்மதி, சந்தோஷம் எல்லாம் தொலைந்து பணவெறியும் நிம்மதியின்மையும் அதிகரிக்கிறது என்று. இதுக்கு பெரிய ஆய்வுலாம் தேவை இல்லைங்க, நம்ம தினம் பார்க்கிறவர்களிடம் கேட்டாலே போதும், எல்லோர் வாழ்க்கையிலும் இப்படித்தான்... சரி இப்படியே போய்கிட்டு இருந்தா வாழ்க்கைல எப்டிதான் சந்தோசமா இருக்கிறது, இதற்கு இந்த உலகத்துல ஒரு நிரந்தர தீர்வு (solution) இல்லவே இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறது. அத பத்தி சொல்லத்தான் இந்த பதிவே!

தீர்வு 1:
உங்களுக்கு மேல் உள்ளவர்களை பார்த்து ஒருபோதும் உங்களை ஒப்பீடு (Comparison) செய்யாதீர்கள், அப்படி செய்தால் அங்குதான் உங்கள் நிம்மதியை தொலைக்கிறீர்கள்.

தீர்வு 2:
உங்களுக்கு கீழ் உள்ளவர்களை பார்த்து ஆகா நாம எவ்ளோ அதிர்ஷ்ட சாலி இறைவன் நமக்கு இவ்ளோ அருட்கொடைகள் செய்து இருக்கிறானே, அவர் நிலைமையில் நாம இருந்தா என்ன ஆகிருக்கும் என்று இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

தீர்வு 3:
எல்லாவித முயற்சிகளையும் செய்துவிட்டு, இறைவன் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். வெற்றி கிடைத்தால் இறைவனுக்கு நன்றி பாராட்ட வேண்டும், இல்லையென்றால் எனக்கு இறைவன் விதித்தது இதுதான் என்று நினைத்து இறைவனிடம் கேட்டு பிரார்த்திக்க வேண்டும்... 

இது நம் பழகத்தில் வந்துவிட்டால் இனி நிம்மதி உங்கள் சாய்ஸ்!

8 கருத்துகள்:

  1. சரியாக சொல்லியுள்ளீர்கள்!!

    பதிலளிநீக்கு
  2. செருப்பில்லை என வருத்தப்பட்டேன்.... காலில்லாதவனை காணும் வரை.....

    பதிவு போடுரதுக்குலாம் நேரம் கிடைக்குதா இப்போ.... நீ கலக்கு மச்சான்... :-)

    பதிலளிநீக்கு
  3. தீர்வுகள் எல்லாம் சூப்பர், மிக நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  4. நல்லா இருக்கு உங்க பதிவு, போதுமென்ற மனம் ஒவ்வொருத்தருக்கும் வந்து விட்டால், நிம்மதி தானே வந்து விடும்

    பதிலளிநீக்கு
  5. அன்புத்தோழன் சொன்னது…
    //செருப்பில்லை என வருத்தப்பட்டேன்.... காலில்லாதவனை காணும் வரை.....

    பதிவு போடுரதுக்குலாம் நேரம் கிடைக்குதா இப்போ.... நீ கலக்கு மச்சான்... :-)\\

    வா மச்சான், திடீர்னு தோனுச்சு போட்டாச்சு. அவ்ளோதான் மத்தபடி நேரம் கோசம் டைட்டுதன்

    பதிலளிநீக்கு
  6. //Abu Nadeem சொன்னது…
    தீர்வுகள் எல்லாம் சூப்பர், மிக நல்ல பதிவ\\

    நன்றி அபு நதீம்

    பதிலளிநீக்கு
  7. //Mansoor சொன்னது…
    நல்லா இருக்கு உங்க பதிவு, போதுமென்ற மனம் ஒவ்வொருத்தருக்கும் வந்து விட்டால், நிம்மதி தானே வந்து விடும்//

    நன்றி மன்சூர், ரொம்ப நாளாச்சு பார்த்து

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்து