அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

சனி, 24 ஏப்ரல், 2010

மனம் கவர்ந்த கதை

சமீபத்தில் குடும்ப மலர் வார இதழில் ஒரு கதைப் படித்தேன், மனிதனின் சுயநலத்தைப் பற்றிதான். அடர்ந்த காடு வழியாக ஒரு மனிதன் சென்றான், அந்த வழியே இரைத் தேடி வந்த புலி அவனை பார்த்துவிடுகிறது. துண்ட காணோம் துணிய காணோம்னு மனிதன் ஓடறான், புலி விடவில்லை, துரத்தி கொண்டே போக, அவன் எப்டியோ அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிவிட்டன, ஆனாலும் புலிக்கு அவனை விடுவதாக ஐடியா இல்லை. மரத்தையே சுற்றிசுற்றி வருகிறது. பயத்தின் உச்சிக்கே சென்ற மனிதன் மரத்தை இறுக்கமாக பிடித்துகொண்டான். அப்போது தனக்கு பக்கத்தில் இருந்த கிளையில் எதோ அசைவதை உணர்ந்த  அவன் அங்கே ஒரு கரடி இருப்பதைக் கண்டு குலை நடுங்கி போனான். தன்னைப் பார்த்து மிரண்டு போன மனிதனைப் பார்த்து அந்த கரடி இரக்கம் கொள்கிறது. அவனைப் பார்த்து, மனிதா  என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம், நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று  சொன்னவுடன், அப்பாடன்னு ஒரு ஏக்க பெருமூச்சு விட்டான். கரடி சொன்னது, நீ உயிருக்கு பயந்து மரத்தில் ஏறும்போது என் காலில் கைவைதுவிட்டாய், அப்போதே நீ என்னிடம் அடைக்கலம் புகுந்துல்லாய், அதனால் நான் உன்னை எந்த நிலையிலும் கொள்ள மாட்டேன் என்று சொன்னது. அப்பாடா தலைக்கு வந்தது தலைப்பயோடு போய்டுச்சுன்னு பெருமூச்சு விட்டு மனிதன் கீழே குனிந்து பார்த்தான் புலி அங்கிருந்து நகர்வதாக இல்லை. அது நாசுக்கா கரடியிடம் சொன்னது  ஏ  கரடி நீயும் மிருகம், நானும் மிருகம் அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி ஒன்று  நீ அவனைச் சாப்பிடு இல்லையென்றால் கீழே தள்ளிவிடு நான் அவனைச் சாப்பிடுகிறேன் என்றது புலி. அதற்கு கரடி, அவன் என்னிடம் அடைகலம் தேடி வந்துள்ளான், நான் அவனை காப்பாற்றியே தீருவேன் என்றது. சிறிது நேரம் கழித்து மனம் தளராத புலி மனிதனிடம் வஞ்சகமாக மனிதனிடம் பேச்சு கொடுத்தது. மனிதா! எனக்கு பசி அதிகமாகிவிட்டது. எப்படியும் எனக்கு இரை வேண்டும், நீ கீழே வந்தால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டுவிடுவேன். ஆனால் நீ உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் சொல்கிறேன், உன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கி கொண்டு இருக்கிறது அதை நீ கீழே தள்ளி விடு நான் அதை சாப்பிட்டு விடுகிறேன், என் பசி தீர்ந்துவிடும் பிறகு நீ பிழைத்துவிடலாம் என்றது. தான் எப்டியும் உயரி பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன் தூங்கி கொண்டிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான், ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடிதுகொண்டது, கீழே விழாமல் தப்பியது. நடுங்கிப்போன மனிதன் அவனை அறியாமல் தன் கை கால் நடுங்கி கீழே அவனாகவே கீழே விழுந்து விடுவான் போல் இருந்தது. அப்போது கரடி நிதானமாக பேசியது. பயப்படாதே, இப்போதும் கூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாப படுகிறேன் தவிர, உன்னை பழி வாங்க நினைக்கவில்லை என்றது. நீ இப்படி செய்யலாம் என்று நான் எண்ணினேன் அதனால் முன்னேசிரிக்கையாக இருந்தேன் இப்போதும் கூட நான் உன்னை கொள்ள மாட்டேன் புலியிடம் தள்ளியும் விடமாட்டேன் என்றது. இதைக் கேட்டதும் மனிதன் தான் செய்த தவறை எண்ணி மிகவும் வருந்தி, கண்ணீர் விட்டான் மனிதன்!!!
மிருகத்திடம் இருக்கும் உயர்ந்த குணம் மனிதர்களிடம் இன்று அறவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதை சுட்டி காட்டவே இந்த கதை...

5 கருத்துகள்:

  1. நல்ல அறிவுரை, குழந்தைகளிடம் பகிர நல்ல ஒரு கதை தந்துட்டிங்க!!

    பதிலளிநீக்கு
  2. மிருகத்திடன் இருக்கும் இரக்கம் பண்பு கூட மனிதனிடமில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு இந்த கதை...

    பதிலளிநீக்கு
  3. //SUFFIX சொன்னது…
    நல்ல அறிவுரை, குழந்தைகளிடம் பகிர நல்ல ஒரு கதை தந்துட்டிங்க!!//

    உங்களின் பின்னூட்டம் எனக்கு எப்போதும்
    ஊக்கமாகவே இருக்கிறது. நன்றி

    பதிலளிநீக்கு
  4. //தமிழரசி சொன்னது…
    மிருகத்திடன் இருக்கும் இரக்கம் பண்பு கூட மனிதனிடமில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு இந்த கதை...//

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கு நன்றி தமிழரசி.

    பதிலளிநீக்கு
  5. கதையின் கருத்து சிலிர்ப்பு... மிருகங்களை பேச வைத்த நல்ல கற்பனை... கடைசில என்ன ஆச்சுன்னு தெரியாம போச்சே... செல்வராகவன் திரைப்பட பாணி கதை போல... ஹ ஹ.... ;-)போல... ஹ ஹ.... ;-)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்து