அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

அவசரம்....!

காலைல 5 மணிக்கெல்லாம் எழுந்து அவசர அவரசமா குளிச்சிட்டு ஒரு கைல டிபன் பாக்ஸும் இன்னொரு கைல டீய வச்சு குடிசிகிட்டே சூவ மாட்டிகிட்டு ஆபிஸுக்கு கிளம்பி வந்தா ஒரே ட்ராபிக். எரிச்சலோட வண்டிய உருட்டிகிட்டே  எப்டியோ அடிச்சு புடிச்சு ஆபிஸ்ல வந்து சேர ஒரு கால் மணி நேரம் லேட் ஆகிருக்கும். அப்பாடான்னு  யார் கண்லயும் படாம   நைசா போய் சீட்ல உக்காந்து கொஞ்சம் ஹாயா  ஏசி காத்துல ரிலாக்ஸ் பண்ணிட்டு கம்ப்யுட்டர ஆன் பண்ணி ஏதாவது ஈமெயில் வந்து இருந்தால் பார்த்துட்டு அப்புறம் வேலைய ஸ்டார்ட் பண்ணுவோம்ன்னு இருந்தா, அப்டி பெருசா செய்றதுக்கு ஒண்ணுமே இல்ல, அட இதுக்கா இவ்ளோ அடிச்சி புடிச்சி வந்தோம்ன்னு நொந்துகிட்டே சரி ப்ளாக்லயாவது எதாச்சும் போடலாம்னு நெட் ஓபன் பண்ணலாம்னு பாத்தா, என்னோட சீட் நட்ட நடுல எல்லார் கண்ணுலையும் பட்ரமாரி வச்சுபுட்டனுவோ பாவி பய புள்ளைக. அதுனால நெட்ட கூட ப்ரீயா தொறந்து பார்க்க முடில. அதுனால எல்லாத்தையும் ஒரு பேபெர்ல எழுதி குட்டியா ஒரு விண்டோ ஓபன் பண்ணி கஷ்டப்பட்டு டைப் பண்ணி போட்டாச்சு. இந்த மாரி அனுபவம் யாருகாச்சும் இருந்தால் எப்டி நேரத்த வீனாக்குவீங்கனு பின்னூட்டத்துல சொல்லுங்க.... ரொம்ப மொக்கையா இருக்கோ??? ச்ச்சும்மா ஒரு ட்ரைதன்...

6 கருத்துகள்:

  1. நல்லா அவசரப்பட்டீங்க

    நல்லதுக்கான்னு யோசிச்சீக்கங்க ...

    ;)

    (மொக்கையையும் சீரியஸாக மாற்றுவோர் சங்கம்)

    பதிலளிநீக்கு
  2. என்ன ஒரு அவசரம்... இந்த மாதுரி அவசர பட்டு அவசரப்பட்டு என்னாச்சுனு தான் என்னோட நேற்றைய பதிவு... பொறுமை எருமையை விட பெருசுன்னு சாலமன் ஆப்பைய்யா சொல்லிருக்காராம்... சோ.. நிதானத்தை கடைபுடிப்போம்... வாழ்க ஆபீஸ்... வளர்க வலைத்தளம்.... ;-))

    எங்க ஆபீஸ்ல இந்த பிரச்சன இல்ல.... tintintidin ;-)

    பதிலளிநீக்கு
  3. உங்கள் மாதிரி ஆளுங்களுக்காகவே டிசைன் செய்த டெம்ளேட்டா இருக்கும் போல!! நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. கமெண்ட்ஸ்சையே ஒரு போஸ்டா போற்றலாம் போல,அம்மாடியோ!!! வருகைக்கு நன்றி naina:

    எம்.ஏ.கே உங்களின் இடுக்கைக்கு என்னுடைய கீழ்க்கண்ட பின்னூட்டம் சரியான பின்னூட்டமாக இருக்குமென நினைக்கின்றேன்.

    இது உங்களுக்கு மட்டுமல்ல. நெரையா பேருக்கு நடக்குறது தான்..ஏழு மணி டூட்டிக்கு காலையிலெ நாலு மணிக்கு எழும்புற ஆளுவொ நெரையா பேரு இருக்காங்கெ. நேத்தைய சாப்பாட்டை ஐஸ் பொட்டியிலெ வச்சு அடுத்து நாளு சைட்டுலெ ஓவன்லெ சூடு பண்ணி வெட்றவங்கள் தான் இங்கு அதிகம்... (நாமலும் வெட்டிருக்கொமுலெ...)

    இவ்ளொ பொறுப்பா, கவலையோட அடிச்சி, புடிச்சி ஆபீஸுக்கு போனா அங்கே வேலெ இல்லாமெ சும்மா பேக்கெ, பேக்கெண்டு முழிக்காமெ இருக்குறத்துக்கு வேலை முடிஞ்சி போன பேப்பருவொலெ அள்ளி நம்ம டேபுள்லெ போட்டு நாலு பேருக்கு சீனு எவ்ளோ தடவெ காமிச்சிருக்கோம்....சும்மாவா......அநியாயத்துக்கு....

    செல நேரம் பசங்களோடெ ச்சாட்டிங் பண்ணிக்கிட்டு இருக்கும் பொழுது யாராவது (பாஸ்) நம்ம பக்கம் வந்தா எவ்ளோ சிரிப்பான விசயங்கள் பசங்கள் ச்சாட்டிங்லெ அடிச்சி அனுப்புனாலும் கொஞ்சமும் சிரிக்காமெ மூஞ்செ தூக்கி வச்சிக்கிட்டு சின்சியரா கம்பெனி கரஸ்பாண்டெண்சு அடிக்கிற மாதிரி அடிச்சிருக்கொம்லெ....

    ஆபீஸ்லெ எப்பொழுதாவது மேனெஜ்மெண்ட்லெ பெரிய, பெரிய ஆளுவொ வர்ராங்கண்டு தெரிஞ்சா, அல்லது ஆடிட்டிங் வர்ராங்கண்டு தெரிஞ்சா பழைய, முடிஞ்சி போன/ எக்ஸ்பயரியான வேலெயெலுவொலெ இழுத்துப்போட்டுக்கிட்டு சூட்டிக்கையா கலியாணகார ஊட்டுலெ சாப்பாடு பரத்துரமாதிரி வரிஞ்சி கட்டிக்கிட்டு வேலெ செய்வோம்லெ......

    ஒரு காலத்துலெ அளவு இல்லாமெ இருக்கும் பொழுது ஜாவியாவுலெ எமிக்ரேசன் பாஸாகி உள்ளே போக எவ்லோ தில்லு, முல்லு பண்ணி இருக்கிறோம்.....சும்மா கொஞ்சமாவது இங்கெ பண்ண மாட்டமா என்னெ.......

    என்னா இது சின்னப்புள்ளெத்தனமா இருக்கு....ஆபீஸ்லெ எவ்ளோ அட்டூழியமும், அட்டகாசமும் ரொம்ப அடக்க, ஒடுக்கமா பேணுதலா நாமெ செஞ்சிக்கிட்டு இருக்கிறோம் தெரியுமுல்லெ....

    இது மாதிரி இன்னும் எத்த‌னையோ விச‌ய‌ங்க‌ள் இருக்குது.. அது எல்லாத்தையும் இங்கே அவுத்து உட்டா நல்லா ஈக்காதுண்டு இத்தோட‌ நிப்பாட்ரேன்.....

    வ‌ர‌ட்டா......
    நெய்னா முஹ‌ம்ம‌து....

    பதிலளிநீக்கு
  5. நல்ல தேர்தெடுத்த மொக்கையானாலும், படிக்கிறதுக்கு சுவராஸ்யமா இருக்குது...

    பதிலளிநீக்கு
  6. நட்புடன் ஜமால்
    அன்புத்தோழன்…
    SUFFIX
    அஹமது இர்ஷாத்
    naina
    அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்து