அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஆபீஸ் கான்டீன்

காலைல ஏழு மணிக்கு  ஆரம்பிச்சு  சாய்ங்காலம் அஞ்சு மணி வரைக்கும்  எங்களோட  வேலை  நேரம். இடைல பிரேக் ன்னு சொல்லிக்கொள்ள அப்படி ஒன்னும் இல்லை என்றாலும், தொழுகை நேரத்திற்கு மட்டும் எந்த அனுமதியும் பெறாமல் போய் வர எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பகல் சாப்பாட்டுக்கு படும் பாடு சொல்லி மாளாது.

சீட்டில் இருந்தபடியே  keyboarda  லேசா நகர்த்தி வச்சுட்டு  அங்கேயே  இருந்துதான்  சாப்பிடணும். (ம்ம்ம் Lunch பிரேக் உள்ளவர்களெல்லாம் குடுத்து வச்சவங்க)  ஊர்ல எப்புடியெல்லாம் ராசாமாரி  இருந்தோம், எப்படியெல்லாம் அதிகாரம் செலுத்துனோம்  இப்போ இப்புடி வந்து கஷ்டபடுரோமேனு  எத்தனையோ பேர் (இங்கு family இல்லாதவர்கள்) சொல்லுவதை டெய்லி  கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், இதற்காகவே எங்கள் office இருக்கும்  பில்டிங்கில் பனிரண்டாவது மாடியில் ஒரு ஹோட்டல் திறக்க அனுமதி கொடுத்திருந்தார்கள், ஆனால் அதுவும் நிலைக்கலை. அங்கு செய்யும் சமையல் வாசனை அதே ப்ளோரில் (floor) இருக்கும் மத்த கம்பனியில வேலை செய்பவர்களின்  மூக்கை துளைத்ததால் அங்கு வேலை செய்யும் சாப்பாட்டு ராமன்களுக்கு தொந்தரவா இருக்குனு சொல்லி எடத்த  காலி பண்ண சொல்லிட்டாங்க. அப்புறம்  என்ன???  இப்படியே சில வருசம் பிஸ்கட்டும், காஞ்ச ரொட்டியும் (குப்ஸ்), பழமும் திண்டு லைப் ஓடிகிட்டு இருந்துச்சு.

இப்போ புதுசா  ஒரு மினி ரெஸ்டாரன்ட் (Bufiya) உருவாகி இருக்கு. இங்கு வச்சு  எதுவும் சமைக்க அனுமதி இல்லை அதனால அவங்க வெளியிலேருந்து கப்சா, பிரியாணி, சான்ட்விச், பிச்சா (pizza) போன்ற ஐட்டங்களை  செஞ்சு, கொண்டு வந்து இங்க விற்கிறாங்க.

 இது வெளியில விற்கும் விலையை விட ரெண்டு மடங்கு அதிகம் என்றாலும், இங்கிருக்கும் (சோம்பேறி) பாச்சுலர்களுக்கும் (bachelor) நேர  பற்றாக்  குறை உள்ளவங்களுக்கும் கிடைத்த வரப்ரசாதம்ன்னு தான் சொல்லனும் . நல்ல வேலை நமக்கு இந்த பிரச்னை இல்லப்பா...  தங்கமணி இருகிறதால!

4 கருத்துகள்:

  1. எங்க ஆஃபிஸ் ரூல்ஸ் என்னான்னா, சமைத்த உணவு வகைகள் அதாவது நம்ம நாட்டு ஸ்டைல்ல சாம்பார், ரசம் பொரியல் மாதிரி அயிட்டங்களை சீட்ல வச்சு சாப்பிடக்கூடாது, டைனிங் ரூம்லதான் போய் சாப்பிடணும், சேண்ட்விச் போன்றவைகளை சீடலயே சாப்பிடலாம்!!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கு நன்றி மச்சான்... நம்ம ஆபீஸ்ல எல்லாமே டைனிங் ரூம்தான்... ஆபீஸ் (Desk)டேபுள டைனிங் டேப்லுல மாத்திடுவோம்ல!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்து