அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சிகரட்டில் உள்ள நச்சு பொருட்கள்...


ஒருவர் புகைப்பதால் உதடு, நாக்கு, வாய், உமிழ் நீர்ச் சுரப்பிகள் (salivary glands), மூச்சுக்குழலின் மேற்பகுதி (larynx), தொண்டையிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் குழாய் (esophagus) மற்றும் அதன் நடு இறுதிப் பகுதி புற்று நோய் தோன்றும் பகுதிகளாகும். வயிற்றுப் புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய், அறிகுறி தென்பட்டாலே அது புகையுறிஞ்சியால் வந்த வினை என்று தெரிந்துகொள்ளலாம். புகையுறிஞ்சலுக்கும் லுக்கேமியா என்ற வியாதிக்கும் மிகுந்த தொடர்புள்ளது.

புகைப்பழக்கமில்லாத பெண்ணை விட, புகையுறிஞ்சும் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு முன்பாகவே மாதவிலக்கு நின்றுவிடும் அபாயம் ஏற்படும். புகையுறிஞ்சும் பழக்கமுள்ள பெண்களுக்கு நிகோடின் நச்சு ஹார்மோன்கள சுரப்பிகளைச் செயலிழக்க வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எலும்பு உறுதியற்ற அல்லது எளிதில் உடைந்துவிடுகின்ற தனமையையும் (osteoporosis) ஏற்படுத்தும்.

இவ்வளவு கேடுகெட்ட இந்த சிகரட்டை உடனடியாக (முடியாவிட்டாலும்) முயற்சி செய்து விட்டுவிட வேண்டும்... இதில் உள்ள தீமைகள் பற்றி எல்லாம் தெரிந்தும் அந்த செயலை செய்யும்போது அது தற்கொலைக்கு சமமாக ஆகி விடுகிறது... அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பற்றுவனாக!

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். அல்குர்ஆன் 4: 29)நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைபிடியுங்கள். இன்னல்களைச் சகித்துக் கொள்ளுங்கள் அல்குர்ஆன்: 3:200

4 கருத்துகள்:

  1. ரொம்ப நல்ல பகிர்வு. ரொம்ப பயமும் காட்டிட்டீங்க. இன்ஷா அல்லாஹ்...........

    பதிலளிநீக்கு
  2. மின்னல் வேகத்தில் வந்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி காக்கா... இதுல உள்ள இந்த விசத்தைலாம் பார்த்து நானே பயந்துதான் போயிட்டேன்...!

    பதிலளிநீக்கு
  3. நல்ல விடயம்

    பார்த்து யார்ன்னா ...

    இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு
  4. புகை பழக்கம் கொடிய‌தே, இத்தனை கேடுகள் இருக்குன்னு தெரிந்தும் விட மறுப்பவர்கள் நாம் என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்து