அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

புதன், 30 டிசம்பர், 2009

Microsoft Security Essentials


Microsoft Security Essentials இது ஒரு இலவச ஆண்ட்டிவைரஸ் இன்னிறுவனத்தால் வளங்கப்படுகிறது. இதை டவுண்லோட் செய்வது மிகவும் சுலபம், மிக எளிதாக உபயோகிக்கமுடியும். எப்போதும் அப் டு டேட் ஆக இருப்பதால் லேடஸ்ட் டெக்னாலஜி மூலம் உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாக்கப் பட்டுள்ளது என்று உறுதியாக சொல்ல  முடியும். உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று சுலபமாக சொல்லலாம்.
இது மிக நுட்பமாகவும், சீராகவும் செயல்படுகிறது. அதனால்தான் நீங்கள் விரும்பிய முறையில் விண்டோஸ் பாதிக்கபட்டுள்ள உங்கள் கம்ப்யூட்டரில் எந்த இடையூறும் நீண்ட நேரம் (இன்ஸ்டால் செய்வதற்கு) காத்திராமல் பயன்படுத்தலாம்.

இதை இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே எதவ்து ஆண்ட்டிவைரஸ் இன்ஸ்டால் செய்து இருந்தால் அதை நீக்கிவிட்டு இதை டவுன்லோட்  செய்யவும்.

திங்கள், 28 டிசம்பர், 2009

110௦ வோல்ட் பல்பு


இன்றோடு நான் இந்த ப்ளாக் ஆரம்பிச்சு 3மாசம் ஆயிடுச்சுங்க. இதுலெல்லாம் எனக்கு அவ்ளோவா இன்டெரெஸ்ட் இல்லேனாலும் எல்லாரும் என் ப்ளாக் பாரு என் ப்ளாக் பாருன்னு சொல்றாங்களேன்னு அது என்னதான்னு பாத்துருவோம்னு எப்டியோ ஒரு வழியா க்ரியேட் பண்ணியாச்சு. அப்றம் அதுல எதாவது போடனும்ன்ல என்னத்தப் போடறதுன்னு யோசிச்சு யோசிச்சு பாத்தேன் ஒண்ணுமே தோனல. அப்பதான் முடிவு பண்ணினேன், இதெல்லாம் நமக்கு சரிப்பட்டுவராதுன்னு. அதுனால மத்த ப்ளாக்ல வர (நல்ல) தகவலை மட்டும் அப்பப்ப (சுட்டு) இதுல போட ஆரம்பிச்சேன். அப்போ திடீர்னு இது தோனுச்சு, நேத்து நடந்த சம்பவம்...சரி இதையாவது போட்டுப் பாப்போமேன்னுதான் இங்க போடறேன், படிச்சிட்டு நல்லா இருந்த மட்டும் சொல்லுங்க, இல்லேனா ஒண்ணுமே சொல்லாதீங்க. என்னடா தலைப்பு 110௦ வோல்ட் பல்புன்னு வச்சுட்டு இப்படி ப்ளேடு  போட்டு   கொல்றானேன்னு தோணுதா....ம்ம்ம் புரியுது.... ...இப்போ கீழ படிங்க.

எங்க வீட்டு கிட்சென்ல முந்தா நாள் பல்பு ப்யூஸ் ஆய்டுச்சுங்க, சரி கடைல போய் வேற பல்பு வாங்கிட்டு வந்து போடலாம்னு போய் வங்கிட்டும் வந்துட்டேன். நான் எப்பவுமே வெல்ல பல்பதான் விரும்புவேன், (அப்பதான் வீடும் மனசும் வெளிச்சமா இருக்கும்னு எனக்கு ஒரு அபிப்ராயம் ஹீ ஹீ ஹீ) நேத்து பான்டா    சூப்பர்மாற்கெட்ல   போயி ஒரு பல்பு வாங்கிட்டு வந்து போட்டு சுவிட்ச் ஆன் பண்ணினது மட்டும்தான் தெரியும், கிட்செனே பளிச்சுன்னு மின்னல் மாறி (மஞ்ச மின்னல்) ஒரு மின்னு மின்னிட்டு மறைந்திருச்சு, அதுவும் ஒரு அரை வினாடிதான்... டொப்ன்னு ஒரு மெல்லிய ஓசை, அவ்ளோதான் புச்ஷ்ன்னு போச்சு அந்த பல்பு. எனக்கோ மனசு ரொம்ப கஷ்டமா போச்சு. என்னடா 11 ரியால் கொடுத்து வாங்கின பல்பு ஒரு நாள் (அட ஒரு நிமிஷம்) கூட முழுசா எரியளையேன்னு  ஒரே பீலிங், பார்த்தா அது 110 பல்பு, வீட்ல இருந்ததோ 220 வோல்ட், சரி எதுக்கும் கடைல போய் சொல்லிபார்போம்னு திரும்ப போனேன். போய் நடந்தத சொன்னேன், அவன் இது எத்தன வாட்ஸ்ன்னு செக் பண்ணினியான்னு கேட்டான், நான் அப்டியே தலைய சொறிஞ்சிகிட்டு இல்லேன்னு சொன்னேன், ஆனாலும் அவன் ரொம்ம்ம்மம்ப  நல்லவந்தான், சரி, நீங்க அங்க போய் வேற பல்பு எடுத்துகோங்கனு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு அவர் வேலைய பாக்க போய்ட்டார்.  அப்பதான் புரிஞ்சிகிட்டேன் உண்மை ஒருபோதும் தோக்காதுன்னு. ஆஹா உண்மை ஜெய்ச்சிருசின்னு ஒரு மன திருப்தியோட அந்த பல்பை வாங்கிட்டு வீட்டுக்கு  வந்து ஹோலடர்ல மாட்டி சுவிட்ச் ஆன் பண்ணினா, இன்னிக்குதான் இந்த வீடே புதுசா கட்டினாற்போல அப்டி ஒரு பிரகாசமாக இருந்தது....இதுவே உண்மைக்குக் கிடைச்சப் பரிசாக எண்ணி மன மகிழ்ச்சியடைந்தேன்.
"அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு, அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

வியாழன், 24 டிசம்பர், 2009

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி ஒரு சர்வதேச திரைப்படம்

இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆவணமாக பெரும் பொருட்செலவில் புதியதோர் ஆங்கிலத் திரைப்படம் உருவாகிறது. "இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முன்பு துவங்கி, நபியவர்களின் மரணம் வரையிலான முழுமையான தொகுப்பான இத்திரைப்படம், நபியவர்கள் பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் அனைத்து அவதூறுகளையும் களையும்!" என்கிறார் அஹ்மது அப்துல்லாஹ் அல் முஸ்தஃபா. இவர் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அல் நூர் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவராவார்.
வளைகுடா நாட்டின் முக்கிய நாடுகளில் ஒன்றான கத்தரிலுள்ள முன்னணி ஊடக நிறுவனமான அல்நூர் ஹோல்டிங் இந்தத் திரைப்படத்தினைத் தயாரிக்கிறது. சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு துவங்கவிருக்கும் இத்திரைப்படம், 25 முதல் 30 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. “இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" - அப்துல்லாஹ். ”
திரைப்படத் தயாரிப்புக் குழுவிற்கான தேவைக்காக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள திறமையான படத் தயாரிப்புக் நிறுவனங்களைத் தேர்வு செய்து கொண்டு வருகிறது அல் நூர் ஹோல்டிங் நிறுவனம். இப்படத்தைத் தயாரிக்க அமெரிக்கத் தயாரிப்பாளரான பேர்ரி எம். ஆஸ்போர்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், உலகமெங்கும் சிறார்கள் மனதையும் பல ஆஸ்கர் பரிசுகளையும் அள்ளிச் சென்ற “The Lord of the Rings: The Return of the King”படத் தயாரிப்பாளராவார். இத்திரைப்படத்திற்காக இவருக்கு Academy Award for Best Picture விருது கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் புகழ் பெற்ற The Matrix படத்தினைத் தயாரித்தவரும் இவரே. "ஆங்கிலம் பேசும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படும். இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" என்கிறார் அப்துல்லாஹ். இத்திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள டாக்டர். யூஸுப் அல் கர்ளாவி, "இத்திரைப்படம் ஒரு இஸ்லாமிய தஃவா (அழைப்பு) ஆகும்" என்று தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத் தயாரிப்பின் டெக்னிக்கல் கன்ஸல்டண்ட் மற்றும் முழு மேற்பார்வையையும் இவரே கவனிக்கிறார். இத்திரைப்படத்தின் உரைகள் (ஸ்க்ரிப்ட்), படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் மேற்பார்வையாளராக டாக்டர் யூஸுப் அல் கர்ளாவியும், அவர் தலைமையில் ஒரு இஸ்லாமியக் குழுவும் அமைக்கப் படவுள்ளது என்கிறார் அப்துல்லாஹ் இத்திரைப்படம், உலகெங்கும் தவறான புரிதல்களுக்குப் பதிலடியாக பெரும் தாக்கத்தையும் கூடவே மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் என்கிறார் சர்வதேச முஸ்லிம் அறிஞர்களுக்கான ஒன்றியத்திற்குத் தலைவரான டாக்டர். யூஸுப் கர்ளாவி கடந்த 2005 ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஜில்லண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை 12 கார்ட்டூன்களை தனது தினசரியில் வெளியிட்டிருந்தது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் அங்கீகாரத்திற்கும் சற்றும் தொடர்பில்லாத அவதூறுகளைச் சுமத்தி இழிவு படுத்தும் எண்ணத்துடன் அப் பத்திரிகை கார்ட்டூன்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து உலகமெங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர். பெரும் எண்ணிக்கையிலான பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் சர்வதேச மீடியா சாதனங்கள் மூலம் முஸ்லிம்களின் கண்டனங்களும், எதிர்ப்புகளும் பதிவு செய்யப் பட்டன. அது நாள் வரை இஸ்லாத்திற்கு எதிராக திரைமறைவில் இருந்து நடந்து வந்த சூழ்ச்சிகளும், உலகெங்கும் இஸ்லாம் மீது வலிந்து பரப்பப் பட்டு வந்த இஸ்லாமோஃபோபியாவின் ஒட்டுமொத்த உருவமும் வெளியானது. அத்துடன் இஸ்லாத்தின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, இஸ்லாம் பற்றிய அறிவை முழு அளவில் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம்கள் மீது சாட்டப் பட்டிருப்பதை உணர்ந்தனர். அதனைத் தொடர்ந்த உலகமெங்கும் "இறைத்தூதரை அறிந்து கொள்" எனும் வகையிலான இஸ்லாமிய பிரச்சாரங்கள் பெருமளவில் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட டென்மார்க்கிலேயே 27 பெரும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுகூடி European Committee for Honoring the Prophet என்ற பெயரில் வலுவான ஒன்றியத்தை அமைத்திருக்கிறது. இஸ்லாத்தின் மீதும் இறைத்தூதர் மீதும் உலகமெங்கும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் தவறான எண்ணங்களுக்கான ஒரு சரியான மறுமொழியாக இத்திரைப்படம் அமையும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.

- நன்றி அபூ ஸாலிஹா : http://www.satyamargam.com/1378




செவ்வாய், 22 டிசம்பர், 2009

மனச்சோர்வு

பார்த்திபனும் கோபியும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறவர்கள். இருவர் வசிப்பதும் அடுத்தடுத்தத் தெருக்களில்தான். வீட்டிலிருந்து ஐந்து நிமிடம் நடந்து பெரிய வீதிக்கு வந்தால் போதும், அவர்கள் நிறுவனத்தின் பேருந்து வந்து அவர்களை அழைத்துச் சென்றுவிடும். பேருந்தில் கூட இரண்டுபேரும் பெரும்பாலும் அடுத்தடுத்த இருக்கைகளில்தான் உட்கார்ந்து கொள்வார்கள். சுமார் நாற்பத்தைந்து நிமிடப் பயணத்துக்கு அப்புறம்தான் அலுவலகம் வரும். அத்தனை நேரமும் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா? பேசிக்கொண்டுதான் செல்வார்கள், உள்ளூர் விஷயங்களில் இருந்து உலக நடப்பு வரை.
ஆனால் போன மாதம் அவர்கள் ஒருவரையருவர் சந்தித்தபோது திடுக்கிட்டனர். அவர்கள் சந்தித்த இடம் அந்த மாதிரி. மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் சென்றிருந்தபோதுதான், அவர்கள் ஒருவரையருவர் பார்க்க நேரிட்டது. ‘‘இவனை நமக்கு நன்கு தெரியும் என்று நினைத்திருந்தோமோ? இவனுக்குமா...?’’ இருவருக்குமே வியப்பாக இருந்தது. பிறகு கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது. அதுதானே மனித இயல்பு! நமக்கு இருக்கும் பிரச்னை இன்னொருவருக்கும் இருந்தால், அதில் அற்ப திருப்தி காண்பது. பார்த்திபனுக்கும் கோபிக்கும் என்னதான் பிரச்னை? இருவருக்கும் தீவிர மனச்சோர்வு அல்லது மன அழுத்தம். ‘டிப்ரஷன்’ என்பார்களே, அதுதான்.
இந்த இடத்தில் மனச்சோர்வை, ஆண்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் குறிப்பாக பார்க்க வேண்டும். மூன்று வருடங்கள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள். தினமும் நிறைய நேரம் பேசிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தவர்கள். ஆனாலும் தங்கள் மனதில் என்ன குறை என்பதை, ஒரு வார்த்தைகூட மற்றவரிடம் வெளிப்படுத்தவில்லை. பார்த்திபனும் கோபியும் விதிவிலக்குகள் அல்ல. பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான். தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை வேறு யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்குவார்கள். சமீபத்தில் நடந்த சில ஆராய்ச்சிகள் மனச்சோர்வினால், ஆண்களைப் போல இருமடங்கு பெண்கள் பாதிக்கப் படுகின்றனர் என்கிறது. ஆனால் இதனால் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த விவரங்கள் வெளிப் படையாகத் தெரியவில்லை என்பதும் உண்மை.
என்ன காரணம்? மனச்சோர்வு இருப்பவர்கள் எப்படி அதை வெளிப் படுத்துவார்கள் என்று நமக்கு ஒரு ஐடியா இருக்கும் இல்லையா? ஆனால் மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலரும் இந்த விதங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிக் கூறுவது அயோவா பல்கலைக்கழகத்தின் மன நல மருத்துவர்களான ராபினோ மற்றும் கோச்ரன் ஆகியோர்கள்தான். இவர்கள் இருவரும் ஆண்களின் மனவியல் சிக்கல்கள் குறித்து பல முக்கிய நூல்களை எழுதியுள்ளனர். இரு வருடங்களுக்கு முன் ‘அமெரிக்கன் ஜானல் ஆஃப் மெடிகல் ஜெனெடிக்ஸ்’ என்ற இதழில் ஒரு முக்கியமான கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் ஆண்களின் மனச்சோர்வுக்கும் பெண்களின் மனச் சோர்வுக்கும் இடையே மரபணு ரீதியாகவே வேறுபாடுகள் உண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரும் மனச்சோர்வு சிக்கல் தொடர்பான ௧௯ குரோமொசோம் பகுதிகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டனர். இவற்றில் மூன்றுதான் சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்தது. மற்றவை ஆண்களிடம் ஒருவகை பாதிப்பையும், பெண்களிடம் ஒருவகை பாதிப்பையும் உணர்த்தியது. ஆண்கள் பொதுவாக அழுவதில்லை.‘‘ஐய, ஆம்பிளையா இருந்துகிட்டு அழுவாங்களா? போய் புடவை கட்டிக்க’’ என்பது போல் கேலி செய்து வளர்க்கும் சமுதாயம் நம்முடையது. பெரும்பாலான நாடுகளில் ஆண்கள் என்றால் கம்பீரம் என்றுதான் அர்த்தம். அரசியல் மாநாட்டில் கண்ணீர் பெருக்கெடுத்த ஓர் அரசியல்கட்சித் தலைவரை இங்கு பத்திரிகைகள் விதவிதமாக கிண்டல் செய்தது நினைவிருக்கலாம். அழுவது மட்டுமல்ல, வருத்தத்தை வெளிக்காட்டுவதையே ஆண்கள் கௌரவக் குறைவாக கருதுகிறார்கள். இதனால், மனச்சோர்வு கொண்ட ஆண்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம்தான். பின் ஆண்களின் மன இறுக்கம் எப்படித்தான் வெளிப்படும்? பெரும்பாலும் உடல்நலக் கோளாறுகளின் மூலம்தான் இது வெளிப்படுகிறது. தலைவலி அதில் முக்கியமானது. வயிற்றுக்கோளாறு இன்னொரு வெளிப்பாடு. இல்லற உறவில் நாட்டம் குறைந்து போவது வேறு ஒருவகை. மனச்சோர்வு எனும் மனநோயால் பாதிக்கப்படும் ஆண், அடிக்கடி கோபம் கொள்ளலாம். தொட்டதெற்கெல்லாம் எரிந்து விழலாம். அலுவலகத்தில் திடீரென்று வேலை செய்யமுடியாமல் மனம் மரத்துப்போனது போல் இருக்கும். சீரான தூக்கம் இருக்காது.

இப்படியெல்லாம் மாறினார் கிஷோர் என்பவர். பொறுமையே உருவாக இருந்த அவர் தன் நண்பர்களிடம் அடிக்கடி எரிந்து விழுந்தார். படுத்துக்கொண்ட பத்தாவது நிமிடம் தூங்கிவிடும் பழக்கம் உடைய அவர் மணிக்கணக்கில் தூக்கம் வராமல் சிரமப்பட்டார். நண்பர் ஒருவர் அவரை கட்டாயப்படுத்தி மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். பலவித கேள்விகள். சோதனைகள். முடிவில் ‘‘உங்களுக்கு டிப்ரஷன். எனவே, அதற்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும்’’ என்றார் டாக்டர். கிஷோரால் நம்ப முடியவில்லை. ‘‘எனக்கு மனநோயா? சான்ஸே இல்லை’’ என்றார். என்றாலும் டாக்டரும், நண்பரும் வற்புறுத்த சிகிச்சைக்கு சம்மதித்தார். இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு ‘‘இப்போது நான் சந்தோஷமாக உணருகிறேன்’’என்று கூறுகிறார் கிஷோர். மனச்சோர்வு என்பது ஏதோ பெண்கள் சம்மந்தப்பட்டது என்ற கருத்து, சமூகத்தில் நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் தனக்கு ‘பெண்மைச் சாயல்’ பூசப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் ஆண்கள் ‘‘எனக்கென்ன? நான் நல்லாதான் இருக்கேன்’’ என்று கூறுவது வழக்கமாகி விட்டது. ஆனால் அதேசமயம் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறதே என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். உள்ளதை வெளிப்படுத்தாமல் இருப்பதும், சிகிச்சைக்கு மறுப்பதும் சிலசமயம் உயிருக்கே ஆபத்தாக இருக்கலாம். தீவிர மனச்சோர்வு கொண்ட ஆண்கள் பெண்களை விட அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனும் நிலை அமெரிக்காவில் நிலவுகிறது (ஆனால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் அதிகம் பெண்கள்தான். ‘வெற்றி’ வாய்ப்பில் ஆண்கள் ஸ்கோர் செய்கிறார்கள்.

ஆண்களே, உங்களுக்கு மன இறுக்கம் தோன்றி, தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? முதலில் இது அவமானப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்துவிடவில்லை. மரபணு, சுற்றுப்புற சூழல் (அதாவது உங்களால் கட்டுப்படுத்த இயலாதவை) உங்கள் மனச்சோர்வுக்குக் காரணமாக அமைந்திருக்கக் கூடும். உடனே மனநல மருத்துவரிடம் ஓட வேண்டும் என்பதில்லை. மனதிற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஏதாவது மாற்றங்களை கொண்டு வரமுடியுமா என்று பாருங்கள். ஒரு சின்னச் சுற்றுலா, இடம் மாறுதல், மொட்டை மாடியில் உணவு, அலுவலகத்தில் வேறு திசையில் உங்கள் இறுக்கையை மாற்றிக்கொள்வது போன்ற விஷயங்கள்கூட இதில் உதவலாம். மனச்சோர்வு தொடர்ந்தால், உங்கள் குடும்ப டாக்டரை அணுகலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற காரணங்கள் கூட மனச்சோர்வுக்கு வழி வகுக்கலாம். காரணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தாலே மனச்சோர்வு மறைந்துவிடும். அப்படியும் மனச்சோர்வு தொடருகிறது என்றால் தயங்காமல் மனநல மருத்துவரையோ, மனவியல் மருத்துவரையோ அணுகுங்கள். அவர்களின் சிகிச்சைக்கு உடன்படுங்கள்.

நன்றி மருத்துவம்

புதன், 16 டிசம்பர், 2009

ஸ்ட்ரெஸ் ஓர் உயிர்க் கொல்லி...


What killed Ranjan Das and Lessons for Corporate India

A month ago, many of us heard about the sad demise of Ranjan Das from Bandra, Mumbai. Ranjan, just 42 years of age, was the CEO of SAP-Indian Subcontinent, the youngest CEO of an MNC in India . He was very active in sports, was a fitness freak and a marathon runner. It was common to see him run on Bandra's Carter Road . Just after Diwali, on 21st Oct, he returned home from his gym after a workout, collapsed with a massive heart attack and died. He is survived by his wife and two very young kids. It was certainly a wake-up call for corporate India . However, it was even more disastrous for runners amongst us. Since Ranjan was an avid marathoner ( in Feb 09, he ran Chennai Marathon at the same time some of us were running Pondicherry Marathon 180 km away ), the question came as to why an exceptionally active, athletic person succumb to heart attack at 42 years of age.

Was it the stress?
A couple of you called me asking about the reasons. While Ranjan had mentioned that he faced a lot of stress, that is a common element in most of our lives. We used to think that by being fit, one can conquer the bad effects of stress. So I doubted if the cause was stress.
The Real Reason
However, everyone missed out a small line in the reports that Ranjan used to make do with 4-5 hours of sleep. This is an earlier interview of Ranjan on NDTV in the program 'Boss' Day Out': Boss' Day Out: Ranjan Das of SAP India.

Here he himself admits that he would love to get more sleep ( and that he was not proud of his ability to manage without sleep, contrary to what others extolled ).

The Evidence
Last week, I was working with a well-known cardiologist on the subject of ‘Heart Disease caused by Lack of Sleep’. While I cannot share the video nor the slides because of confidentiality reasons, I have distilled the key points below in the hope it will save some of our lives.

Some Excerpts:
  • Short sleep duration ( <5 or 5-6 hours ) increased risk for high BP by 350% to 500% compared to those who slept longer than 6 hours per night. Paper ublished in 2009. As you know, high BP kills.
  • Young people ( 25-49 years of age ) are twice as likely to get high BP if they sleep less. Paper published in 2006.
  • Individuals who slept less than 5 hours a night had a 3-fold increased risk of heart attacks. Paper published in 1999.
  • Complete and partial lack of sleep increased the blood concentrations of High sensitivity C-Reactive Protein (hs-cRP), the strongest predictor of heart attacks. Even after getting adequate sleep later, the levels stayed high!!
  • Just one night of sleep loss increases very toxic substances in body such as Interleukin-6 (IL-6), Tumour Necrosis Factor-Alpha (TNF-alpha) and C-reactive protein (cRP). They increase risks of many medical conditions, including cancer, arthritis and heart disease. Paper published in 2004.
  • Sleeping for <=5 hours per night leads to 39% increase in heart disease. Sleeping for <=6 hours per night leads to 18% increase in heart disease. Paper published in 2006. 

Ideal Sleep
For lack of space, I cannot explain here the ideal sleep architecture. But in brief, sleep is composed of two stages: REM ( Rapid Eye Movement ) and non-REM. The former helps in mental consolidation while the latter helps in physical repair and rebuilding. During the night, you alternate between REM and non-REM stages 4-5 times. The earlier part of sleep is mostly non-REM. During that period, your pituitary gland releases growth hormones that repair your body. The latter part of sleep is more and more REM type.
For you to be mentally alert during the day, the latter part of sleep is more important. No wonder when you wake up with an alarm clock after 5-6 hours of sleep, you are mentally irritable throughout the day (lack of REM sleep). And if you have slept for less than 5 hours, your body is in a complete physical mess ( lack of non-REM sleep ), you are tired throughout the day, moving like a zombie and your immunity is way down ( I’ve been there, done that ).
Finally, as long-distance runners, you need an hour of extra sleep to repair the running related damage. If you want to know if you are getting adequate sleep, take Epworth Sleepiness Test below.
Interpretation: Score of 0-9 is considered normal while 10 and above abnormal. Many a times, I have clocked 21 out the maximum possible 24, the only saving grace being the last situation, since I don’t like to drive ( maybe, I should ask my driver to answer that line ).

In conclusion:
Barring stress control, Ranjan Das did everything right: eating proper food, exercising ( marathoning! ), maintaining proper weight. But he missed getting proper and adequate sleep, minimum 7 hours. In my opinion, that killed him. If you are not getting enough sleep ( 7 hours ), you are playing with fire, even if you have low stress.I always took pride in my ability to work 50 hours at a stretch whenever the situation warranted. But I was so spooked after seeing the scientific evidence last week that since Saturday night, I ensure I do not even set the alarm clock under 7 hours. Now, that is a nice excuse to get some more sleep.
Unfortunately, Ranjan Das is not alone when it comes to missing sleep. Many of us are doing exactly the same, perhaps out of ignorance. Please forward this mail/article to as many of your colleagues/friends as possible, especially those who might be short-changing their sleep. If we can save even one young life because of this email, I would be the happiest person on earth.

சனி, 21 நவம்பர், 2009

ஹஜ் செய்வது பற்றி விரிவாக தெரிந்துகொள்ள

அஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹி  வ பரகாதுஹு

ஹஜ் செய்வது பற்றி விரிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லின்க் ஐ கிளிக் பண்ணவும்













ஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ
http://www.tntj.net/?cat=31

ஹஜ்ஜின் கடமை
http://www.4shared.com/file/156589210/ef84ffda/haj_duties1.html

ஹஜ் வழி காட்டல்

ஹஜ் உம்ரா விளக்கம்

ஹஜ் உம்ரா சட்டம்

பெண்களின் ஹஜ்

புனித பயணம்


ஹஜ் விளக்க அட்டவணை

வியாழன், 12 நவம்பர், 2009

Missed Call எச்சரிக்கை!!!


உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா? அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன் ரிங் ஆக இருக்கலாம்..இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்...ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.... 2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும். 3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள். பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும். திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும்....சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்....இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்....திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி (வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார். ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லா மேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை. 2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லா மேரி தொடர்பு கொண்டால் எதிர் முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது. அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என கூறிக்கொண்டது. இந்த நிலையில் வேளாங் கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல் போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர்.அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது. ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார். மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார். கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார். ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட....போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார். இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி..இப்போது சிறைக்கும் கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார். நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள். பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர். ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீசார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார். அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது. நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார். இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார். எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு. ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது. கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட...கணவரை உதறிவிட்டு அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி. காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து. இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர்....பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர். ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..எனவே மிஸ்டு காலா...பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்

நன்றி : Hussainghani - muthupetxpress.blogspot.

திங்கள், 2 நவம்பர், 2009

புனித கண்களை பாதுகாப்போம்....

சில நாட்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவர் மூக்கு கண்ணாடி விற்பவறரை சந்திக்க சென்றபோது கண்ணை பாதுகாக்க கண் மருத்துவர் அறிவுறுத்திய சில எக்ஸ்செர்சைஸை கூறினர். 20-20-20. இது நம்ம எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு...

ஸ்டெப் - 1
கம்ப்யூட்டரை பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வரு 20௦ நிமிடத்திற்கு பிறகும், தலையை திருப்பி 20௦ அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்க்க வேண்டும். இது உங்கள் பார்வையின் நீளத்தை மாற்றும். சோர்வு அடைந்த கண்கள் உடையவர் அவசியம் இதை செய்ய வேண்டும்.

ஸ்டெப் - 2
ஒவ்வொரு 20௦ நிமிடத்திற்கு பிறகும் 20௦ தடவை கண் இமையை மூடி திறக்கவும்

ஸ்டெப் - 3
கண்டிப்பாக டைம் கிடைக்கும். ஒவ்வரு 20௦ நிமிடமும் ஒருவர் எழுந்து நடக்க வேண்டும். ஒரே இருக்கையாக இருக்கும்போது உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எழுந்து நடக்கும்போது அது உடலில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் பரவி சீராக இயங்கும்..  

இறைவன் தந்திருக்கும் இந்த புனித கண்களை பாதுகாப்போம். ஆரோக்யமாக வாழ்வோம்.... 


புதன், 28 அக்டோபர், 2009

ஹஜ்ஜுடைய காலம்

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحيمْ
الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلاَ رَفَثَ وَلاَ فُسُوقَ وَلاَ جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُوْلِي الأَلْبَابِ 197

ஹஜ் (ஜூக்குரிய காலம்! தெரிந்த மாதங்களாகும் அம்மாதங்களில் ஹஜ்iஐ (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜூக்குத்) தேவையானவற்றை திரட்டிக் கொள்ளுங்கள் ! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள். 2:197

اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَة
ஹஜ்ஜூடைய மாதத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜூடைய கடமையை இறைவன் இறுதி கடமையாக்கினான். காரணம் அதற்கு முந்தைய கடமைகளாகிய கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், போன்றவைகளை முறைப்படுத்தி செய்து விட்டு இறுதியாக அதுவும் வசதியும், உடல் ஆரோக்கியமும் பெற்றிருந்தால் ஹஜ் என்ற இறுதி கடமையை செய்து இறை திருப்தியை அடைந்து கொள்ள இறைவன் உத்தரவிட்டான். வசதியும், ஆரோக்கியமும் இருந்து ஒருவர் ஹஜ் செய்ய மறுத்தால் மட்டுமே அதனால் அல்லாஹ்வுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை என்றும் கூறினான் இறுதி கடமையாகிய ஹஜ்ஜை செய்யச் செல்வோர் அதற்கு முந்தைய கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற கடமைகளை அழகுறச் செய்து இறுதியாக ஹஜ்ஜை செய்தால் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளை இனிதே நிறைவேற்றி இறை திருப்தியை அடைந்து கொள்ளலாம். அதுவே இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் என்ற அந்தஸ்தை அடையும்.
இறுதி வடிவம் பெறும் எந்த ஒன்றும் ஒழுங்குடன் அமைய வேண்டுமெனில் அதற்கு முந்தையதை சீராக அமைத்திடல் வேண்டும் இல்லை என்றால் அது இறுதி வடிவம் கிடைக்காது என்பதுடன் அது விழலுக்கு இரைத்த நீர் போல் ஆகும். ஒரு கட்டிடத்தை எடுத்துக் கொள்வோம் கட்டிடத்திற்கு இறுதி வடிவம் கிடைப்பதற்கு கட்டிடம் எழுப்பப்படவிருக்கின்ற தரையின் ஈரத் தன்மைக்கு தகுந்தாற்போல் அஸ்த்திவாரமிட்டு அதன் மேல் தூண்கள் நிருவப் பட்டப் பின்னர் கற்களை சீராக அமைத்தால் கட்டிடம் அழுகுடனும், அழுத்தத்துடனும் இறுதி வடிவம் பெறும்.இஸ்லாம் என்ற கட்டிடம் ஐந்து தூண்களின் மேல் (கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்) நிலை பெற்றிருப்பதாக பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் புகாரி, முஸ்லீம். இதில் கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற தூண்களை அகற்றி விட்டு அல்லது அவற்றை சீரில்லாமல் ஏற்றத் தாழ்வுடன் அமைத்து விட்டு ஹஜ் என்ற தூணை மட்டும் முறையாக நிருவினால் அதன் நிலமை என்னவாக இருக்கும்? அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் ஐம்பெரும் தூண்களைக் கொண்டு நிருவிக் கொடுத்த அழகிய கட்டிடத்தை முஸ்லிம் சமுதாயத்தினரே சிதைக்க முயலளாமா? சிந்திப்போம் சீர்பெறுவோம். இஸ்லாத்தின் இறுதிக் கடமையை நிறைவேற்றச் செல்ல விரும்பும் சகோதரர்களே! அதற்கு முந்தைய நான்கு கடமைகளை முழுமைப் படுத்தி விட்டீர்களா? கலிமா இலகுவாக சொல்லி இருப்போம் கலிமாவுடைய பொருளணர்ந்து அதில் நிலைத்திருந்தோமா? என்று ஒரு முறை தங்களைத் தாங்களேக் கேட்டுக் கொள்ளுங்கள். தொழுகை என்ற இறை வழிப்பாட்டை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித் தந்த வழியில் நடைமுறைப் படுத்தினீர்களா? என்பதை ஒரு முறை தங்களைத் தாங்களேக் கேட்டுக் கொள்ளுங்கள். தொழுகை எவரிடத்தில் இருக்குமோ அவரே வெற்றிப் பேற்றோர் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். 23:1,2

எங்கே வெற்றிப் பெறுவோம் ?
மறு உலகில் ! மறுமை நாளின் போது அடியானின் செயல்களில் முதலாவதாக கணக்கு கேட்கப்படுவது அவரது தொழுகைப் பற்றியே, அது முறையாக இருந்தால் அவர் வெற்றிப் பெற்று கரை சேர்ந்து விடுவார், அது சீர் கெட்டிருந்தால் நஷ்டமும் கைசேதமும் உடையவராக ஆகி விடுகின்றார். என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள் நூல்: திர்மிதி, இப்னுமாஜா.
தொழுகை என்ற இறைவனுக்கு தூய்மையான சிந்தனையுடன் செலுத்துகின்ற வழிப்பாடின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விட்டால் அது சீர்கெட்டு அதனால் மறுமையில் வெற்றிப் பெற முடியாமல் போவதுடன் அதற்கடுத்த நிலையில் வரும் அனைத்து வழிப்பாடுகளும் அதே நிலையில் சீர்கெட்டு தோல்வியைத் தழுவும் என்பதை மேற்கானும் நபிமொழி மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள் அப்போது பின்வருமாறு கூறினார்கள்: எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு - அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, அதனால் ஈடேற்றம் பெற முடியாது. (முஸ்னத் அஹமத், இப்னுஹிப்பான்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள். தொழுகை என்ற இறைவனுக்கு செலுத்துகின்ற வழிப்பாடு அறவே பேணப்படாமல் இருந்தால் அல்லது அது முறையற்று இருந்தால் அல்லது பிறருக்கு காட்டுவதற்காக அமைந்திருந்தால் அது அவர்களுக்கு மறுமையில் பெரும் கை சேதத்தை ஏற்படுத்தும் தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான், அவர்கள் பிறருக்குக் காட்டு வதற்காகத் தொழுகின்றனர் திருக்குர்ஆன் 107:4,5,6. கவனக் குறைவாக தொழும் தொழுகையாளிகளைப் பார்த்து அவர்களுடைய தொழுகையால் அவர்களுக்குக் கேடு தான் என்று ஏகஇறைவன் தன் திருமறையில் கோபமாக ஏன் கூறுகின்றான்?
அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித் தராத வழியில் முன்னோர்கள் உருவாக்கித் தந்த வழியில் தொழுகையை அமைத்துக் கொள்வதும் இறைவனுக்கு செலுத்தும் வழிபாட்டில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளாமல் தொழுகைக்கான அழைப்பு விடுக்;கப் பட்;டப்பின்னரும் விரைந்து செல்லாமல் அலச்சியப் படுத்துவதும் தொழுகையின் வரிசையில் சோம்பலுடன் நிற்பதும், பிறர் பார்த்து இவர் பக்தியாளர் என்றுக் கூறுவதற்காக தனது தொழுகையை பிரத்தியேகமாக அமைத்துக் கொள்வது போன்ற தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் ஹஜ்ஜூக்கு முன்னால் பேணப்பட வேண்டிய தொழுகை மனிதரிடத்தில் முறையாக இல்லை என்றால் அதற்கு அடுத்ததாக வரக்கூடிய அனைத்து வழிப்பாடுகளும் செல்லத் தகாததாக ஆகிவிடும். தொழுகை என்ற வழிப்பாட்டை உலகில் வாழும் போது விட்டு விட்டு மறுஉலக விசாரணையின் போது ஹஜ் செய்திருக்கிறேன் அதனால் என்னை சொர்க்கத்தில் சேர்த்து விடு என்று எவரும் இறைவனிடம் கூறமுடியாது என்பதுடன் அதற்கு முன் முறையாகப் பேண வேண்டியத் தொழுகையை விட்டதற்காக''ஸக்கர்' என்று சொல்லக் கூடிய கொழுந்து விட்டு எரியும் நரகிற்குள் புக நேரிடும். ...குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள், நாங்கள் தொழுவோராகவும் ஏழைகளுக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக்கூறுவார்கள், வீணில் மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம், தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம், உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை (எனவும் கூறுவார்கள்). திருக்குர்ஆன் 70:41 முதல் 47 வரை. மேற்கானும் திருமறை வசனத்தில் நரகிற்குள் நுழையச் செய்ததற்கு எது காரணமாக இருந்தது என்று சொர்க்க வாசிகளால் நரகவாசிகளைப் பார்த்து கேட்கப்படும் பொழுது ஹஜ் செய்யவில்லை என்று எவரும் சொல்ல மாட்டார்கள் தொழ வில்லை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் துவண்டு வாடி வதங்கிய ஏழைகளுக்கு எங்களுடைய பொருளாதாரத்திலிருந்து சிலவற்றை எடுத்துக் கொடுத்து உதவ முன் வரவில்லை, மறுமையை மறந்து, உலகத்தை சொர்க்கபுரியாக்கி வாழ்ந்தவர்களைப் பார்த்து எங்களுடைய வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டோம், மரணம் தொண்டைக் குழியை அடையும் வரையில் சுகபோகத்தில் திளைத்தோம். என்றுக் கூறுவார்களாம். உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்றதும் தமது ஆளுகைக்குட்பட்ட மாகாணங்களின் ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! யார் தன் தொழுகையைப் பேணுகின்றாரோ - அதனைக் கண்காணித்தவண்ணம் இருப்பாரோ அவர் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பார். எவர் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றாரோ அவர் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவராகவே இருப்பார்.(மிஷ்காத்) உமருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்ற நற்சான்றிதழை பெருமானார்(ஸல்) அவர்கள் வழங்கினார்கள் அந்தளவுக்கு பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் உமர்(ரலி) அவர்கள் மார்க்க ஞானம் மிக்கவர்களாகவும், இறையச்சமுடையவர்களாகவும் திகழ்ந்தார்கள் இறையச்சமுடைய உமர்(ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் குற்றங்கள் மிகவும் குறைந்து மக்கள் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் முதலில் மக்களுக்கு இட்ட உத்தரவு தொழுகை பற்றியதாக இருந்ததுவே காரணம். ஹஜ்ஜூக்கு செல்ல விருக்கும் முஸ்லிம் சகோதரர்களே! ஹஜ்ஜூடைய வழிப்;பாட்டுக்கு முந்தைய முக்கியமான வழிப்பாடாகிய தொழுகையை முறைப்படி தொழுதீர்களா?அவ்வாறு முறைப் படுத்தி உள்ளச்சத்துடன் தொழுதிருக்க ல்லை என்றால் இப்பொழுது நீங்கள் ஹஜ்ஜூடைய மாதத்தில் இருக்கின்றீர்கள் இப்பொழுதே அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிக் காட்டிய வழியில் தொழுகையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஹஜ்ஜூடைய மாதங்கள் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகிய மூன்று மாதங்களாகும் இந்த மூன்று மாதங்களில் (ஹஜ்ஜூக்குத்) தேவையானவற்றை திரட்டிக் கொள்ளுங்கள் ! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள். 2:197 என்று இறைவன் கூறுகிறான். ஹஜ்ஜூடைய மாதங்களில் இறையச்சத்தை திரட்டுங்கள் இறைவனை அஞ்சுங்கள் ஹாஜி என்ற பட்டத்தைப் பெறுவதற்கான எண்ணத்தில் ஹஜ்ஜூக்கு இறங்காதீர்கள் ஹஜ் உருவாவதற்கு காரணியாக இருந்த தியாகச் செம்மல்களின் வரலாற்றை படித்தீர்கள் என்றால் ஹாஜி என்ற பட்டம் குப்பைத் தொட்டியில் வீசி எறியப் போதுமானது என்ற முடிவுக்கு வருவீர்கள் இதுவே இறையச்சத்தை ஏற்படுத்தும். இனி ஹஜ்ஜூக்கு முந்தைய கடமையாகிய ஜகாத், (தான தருமம்) முறையாக அமைந்திருந்ததா ? என்று அல்லாஹ் நாடினால் எழுதுவோம்....
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். 3:104

சனி, 24 அக்டோபர், 2009

இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் ஈ பாஸ்போர்ட் திட்டம்

ஈ பாஸ்போர்ட் சேவையும் பாஸ்போர்ட் சேவா திட்டத்தையும் அடுத்த ஆண்டு முதல் தொடங்க உள்ளது. ஈ - பாஸ்போர்ட் வழங்குவதன் மூலம் பாஸ்போர்ட்டைடி ஜிட்டல் மயமாக்க உள்ளது இந்திய அரசு. அடுத்த வருடத்தில் 8 லட்சம் E-passport வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட் சேவா மூலம் தேவையற்ற கால தாமதத்தை தவிர்க்க முடியும் என அரசு நம்புகிறது. Build-Operate-Transfer (BOT) திட்டத்தின் கீழ் , டாட்டா (Tata Consultancy Services)நிறுவனத்தால்பாஸ்போர்ட் சேவா திட்டம் தனது சேவைகளை அளிக்க உள்ளது.இதன் மூலம் பொது மக்களுக்கு சரியான நேரத்தில், வெளிப்படையான, வசதியான முறையில்இந்த சேவைகள் வழங்கப்படும். இதற்கு ஆகும் செலவு 207.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் சுமார் ரூபாய்.10மில்லியன். இந்த ஈ- பாஸ்போர்ட் மூலம், தானியங்கி அடையாள உறுதி செய்தாலும் (automatic identity verification),வேகமான இமிக்ரேஷன் சோதனைகளும்,  ஆற்றல் மிக்க எல்லை பாதுகாப்புகளும் செய்து கொள்ளலாம். ஈ- பாஸ்போர்ட்டில் பாஸ்போர்ட்டின் பின்புறத்தில், ஒரு சிப் இணைக்கப்பட்டிருக்கும். இதில்பாஸ்போர்ட்டில் அச்சிடப்பட்டுள்ள தகவல்கள் மின்னணு தகவல்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.இதன் மூலம் பாஸ்போர்ட் தவறாக பயன்படுத்தப்பட்டாலோ, அச்சிடப்பட்ட தகவல்களுக்கும், மின்னணுதகவல்களுக்கும் வேறுபாடு இருந்தாலோ,  தேவையான் நடவடிக்கைகளை எடுக்க முடியும். The International Civil Aviation Organisation (ICAO), ஈ-பாஸ்போர்ட்டுகளுக்கான விதிகளை வகுத்துள்ளது.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வந்து விட்டது வயர் இல்லா (wireless) எலக்ட்ரிசிட்டி


கையடக்கத்தொலைபேசி, WLAN போன்ற தொடர்பாடற்றுறையில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் இப்போது மின்னியலுக்கும் (Electricity) வந்துவிட்டது. விஞ்ஞானிகளின் இரண்டு நூற்றாண்டு கால ஆராய்ச்சியின் முடிவாக இப்போது வயரினைப் பயன்படுத்தாது மின்னைப்பாய்ச்சி மின் சாதனங்களை இயக்குவதில் வெற்றி கண்டுள்ளனர். கடந்த வருடமே (2008) இது சாத்தியமாகியுள்ளது. 60W உள்ள ஒரு மின்குமிழை 7 அடி தூரத்திலுள்ள ஒரு மின்சாதனத்திலிருந்து காற்று மூலமாக மின்னைப்பாய்ச்சி அதை பிரகாசமாக ஒளிரவும் செய்துள்ளனர். இவ்வாறு காற்றினூடு மின்னைப் பாய்ச்சுவதற்கு ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். வாயால சத்தம்போட்டு ஒரு கண்ணாடிக் குவளையை உடைக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் போடும் சப்தத்தின் அதிர்வெண்ணும், அந்தக் கண்ணாடிக்கவளைக்கு இருக்கின்ற அதிர்வெண்ணும் சமமா இருக்கும் போது இது நடைபெறும்.
இதை ஆங்கிலத்தில் Resonance என்று குறிப்பிடுவர். இதை தான் இங்கேயும் பயன்படுத்துகின்றனர். இரண்டு ஒரே மாதிரியான செப்புச் சுருள்களை எடுத்துக் கொண்டு. அதில ஒன்றை மின் சாதனத்திலயும், மற்றோன்றை மின்னோட தொடுத்து சுற்றிலும் பொருத்துகின்றனர். அது மின்னை மின்காந்த அலை வடிவில காத்தில பரவச்செய்கின்றது. அந்த அதிர்வெண்ணும், மின்சாரத்தில் இருக்கின்ற செப்புச் சுருளின் அதிர்வெண்ணும் சமமாக வரும் போது இரண்டு செப்புச் சுருளுக்கும் இடையில மின் காற்றினுடு பாய ஆம்பின்றது. எதிர்காலத்தில இதப் பயன்படுத்தி, விண்ணில இருக்கிற Satelliteல இருந்து சூரியனோட ஒளியில இருந்து மின் எடுத்து பூமிக்கு அனுப்பலாம். சந்திரனில இருந்தும் மின் எடுக்கலாம் என கூறப்படுகின்றது. இவ்வாறு மின்காந்த அலைகளை வளியினூடு கடத்தும்போது அதனால் மனிதனுக்கோ, ஏனய உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது. இதுதொடர்பான மேலதிக தகவல்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

திங்கள், 19 அக்டோபர், 2009

மொபைல் போன் சூடாகும் வரை பேசுபவரா நீங்கள்? *அவசியம் படியுங்கள் இதை!

ஹலோ...'என்று மழலைகூட கொஞ்சி பேசும் அளவிற்கு மொபைல் போன் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. நல்லதோ, கெட்டதோ எந்த விஷயம் என்றாலும், உடனுக்குடன் தொடர்புக் கொள்ள உதவும் "டியேட்டராக' உள்ளது. இன்று ரோட்டில் குப்பை பொறுக்குபவர் கூட மொபைல் வைத்துள்ளார். இது அந்தஸ்தின் அடையாளம் அல்ல. இன்றைய வாழ்வின் அவசியம். ஆனால் மொபைல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்ன பாதிப்புகள்? மதுரை மூளை நரம்பியல் டாக்டர் வி.நாகராஜன் கூறுகிறார்: மொபைல் போன் நல்லதா, கெட்டதா என விவாதங்கள் நடந்தாலும், அதன் பலன் முழுமையாக இதுவரை தெரியவில்லை. விஞ்ஞான ரீதியாக மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது என எவரும் கூறவில்லை. ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டால், அது மொபைல் போனால்தான் வந்ததாக கருதுகின்றனர். உண்மையில் மூளைக்கும், மொபைல் போனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நரம்புகள் பாதிக்கும் என்கின்றனர். அதுவும் ஆதாரப்பூர்வமாக இல்லை. தினமும் 20 மணி நேரமும் மொபைல் போனுடன் பேசும் 150 பேரை நான் ஆய்வு செய்ததில், மூளையில் இருந்து வரும் சக்தி எந்த விதத்திலும் மாறுபடவில்லை. மொபைல் போனிலிருந்து வரும் மின்காந்த அலைகள் ஒரு கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது. தரமற்ற மொபைல் போன்களால் பாதிப்பு வரலாம். மொபைல் போனை இடுப்பில் வைத்தால் உயிரணுக்கள் குறையும், சட்டையில் வைத்தால் மாரடைப்பு வரும். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் என்ற தகவல்கள் எல்லாம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம் மொபைல் போன் டவர்களின் மின்காந்த அலைகளால் பாதிப்பு வரலாம். அருகில் உள்ள பசுமைகள் பாதிக்கலாம். இந்த மின்காந்த அலைகளுக்கு சர்வதேச கட்டுப்பாடு உண்டு. சில மொபைல் போன் நிறுவனங்கள் இதை மதிப்பதில்லை. மொபைல் போனில் எந்த நேரத்தில் என்ன தகவல்கள் வரும் என்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. இதே சிந்தனையுடன் இருப்பதால் மூளைக்கு ஓய்வு ஏற்படுவதில்லை. இதுவே மனநோய்க்கு காரணமாகிறது. அளவுடன் பயன்படுத்தினால் எந்த பிரச்னையும் இல்லை.சிலர் மொபைல் போன் சூடாகும் வரை பேசுகிறார்கள். இது காதினுள் தூசி செல்வதை தடுக்கும் நுண்ணிய ரோமகால்கள் கருக காரணமாகிறது. பின் காது கருப்பாக மாறி அரிப்பு ஏற்படுவதோடு, ஜவ்வும் பாதிக்கும்.  மொபைல் போன் மூலம் ஏற்படும் மனஉளைச்சலிருந்து காத்துக்கொள்ள சில "டிப்ஸ்' :எப்போதும் போனும், கையுமாக இருப்பதை தவிர்க்கவும். மொபைல் போன் ஸ்பீக்கர் போட்டு காதில் வைக்காமல் பேசவும். தேவையில்லாத நேரங்களில் "சுவிட்ச் ஆப்' செய்யவும். வெளியூர் அல்லது தனிமையை நாடிச் செல்லும்போது, குடும்பத்தினர் அவசரம் கருதி தொடர்புக் கொள்ள புதிய சிம் கார்டு எண்ணை கொடுக்கலாம். பள்ளி மாணவர்கள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது. தேவையெனில் பள்ளிக்கே போன் செய்து பெற்றோர் பேசலாம். மொபைல் போனில் திரைக்காட்சி பார்ப்பதால் கண் தசைகள் பாரமாகி, கண் வலி ஏற்படுகிறது. கழுத்திற்கும், தோள்பட்டைக்கும் இடையே மொபைல் போனை சொருகி பேசுவதால், கழுத்து நரம்பு பாதிப்பதோடு, குருத்தெலும்பும் விலகி விடுகிறது. மொபைல் போனை இடுப்பில் வைத்து தூங்கினால், திரும்பி படுக்கும்போது விலா எலும்பு பாதிக்கும். குறிப்பாக மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருக்கும்போதே பேசினால், "ஷாக்' ஏற்பட்டோ, வெடித்தோ உயிரிழப்பு ஏற்படலாம். இவ்வாறு கூறினார்

புதன், 14 அக்டோபர், 2009

மனிதன் ஓதும் மாயமந்திரம்

பணம் பணம் பணம் -இதுவே தினமும் மனிதன் ஓதும் மாயமந்திரம் பணம் இல்லையேல் அவன் பிணம் -இது பழமொழிக்காக சொல்லித்திறியும் சாத்தான் வேதம் ஓட்டம் ஓட்டம் வாழ்க்கை முழுவதும் ஓயாத ஓட்டம் பணத்தை தேடியே வாழ்வை தொலைக்க வரிந்துகட்டிகொண்டு ஓட்டம் பணத்தை குவித்ததும் பாசத்தைத்தொலைக்கும் சில பச்சோந்திகளின் கூட்டம் பாசங்கள் கூட பணத்தின் முன்னே பணிந்துபோகும் அவலம்பணத்திற்காக பாசத்தைக்கூட விர்த்துக்கொள்ளும் இன்றைய காலம் பணம்வரும் முன்னே மனம் நிறைந்தஅமைதி பணம்வந்த பின்னே தொலையும் மனநிம்மதி பணத்தின் முன்னே பாசம் சரணாகதி பணம் வந்தபின்னே பாசம் சந்துபோவதோ விதி இறைவன் பணத்தை படைத்திருந்தால் இதயம் வைத்திருப்பான்- அதில் இரக்கத்தையும் இணைத்திருப்பான் இதை மனிதனல்லாவா படைத்தான் அதுதான் இதயத்தை இணைக்க தவறிவிட்டான் -அதில் இரக்கம் வைக்கவும் மறந்துவிட்டான். காகிதபணத்திற்கு ஏழைகளில் கதறல் கேட்குமா? மனிதர்களின் பாசம்தான் புரியுமா? மனிதர்களுக்கு பணம் அவசியம் அதைவிட பாசம் முக்கியம் பணம் நம்மைவிட்டுப்போனால் திரும்பவந்துவிடும் -ஆனால் பாசம் விட்டுப்போனால்! அதிலுள்ள மனமல்லவா நம்மைவிட்டுப்போகும் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை மாற்றி பாசம் மனதின் மத்தியிலே பணம் அதற்கு பக்கத்திலே என்ற புதுமொழியை உருவாக்குபணத்தின்மேல் உள்ள பக்தியை சற்று ஒதிக்கி அதன் இடைவெளியில் பாசத்தை சொருகு பணத்தையும் பாசத்தையும் இணைத்து பவித்திரமான மனிதனாய் வாழ்ந்துபார் தன்னை உணர்வதோடு பிறறையும் உணரும்போதுந்ததிற்கான பலனை இப்புவியிலேயே அடைவதை தெளிவாய் உணர்வாய்...