அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

திங்கள், 2 நவம்பர், 2009

புனித கண்களை பாதுகாப்போம்....

சில நாட்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவர் மூக்கு கண்ணாடி விற்பவறரை சந்திக்க சென்றபோது கண்ணை பாதுகாக்க கண் மருத்துவர் அறிவுறுத்திய சில எக்ஸ்செர்சைஸை கூறினர். 20-20-20. இது நம்ம எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு...

ஸ்டெப் - 1
கம்ப்யூட்டரை பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வரு 20௦ நிமிடத்திற்கு பிறகும், தலையை திருப்பி 20௦ அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்க்க வேண்டும். இது உங்கள் பார்வையின் நீளத்தை மாற்றும். சோர்வு அடைந்த கண்கள் உடையவர் அவசியம் இதை செய்ய வேண்டும்.

ஸ்டெப் - 2
ஒவ்வொரு 20௦ நிமிடத்திற்கு பிறகும் 20௦ தடவை கண் இமையை மூடி திறக்கவும்

ஸ்டெப் - 3
கண்டிப்பாக டைம் கிடைக்கும். ஒவ்வரு 20௦ நிமிடமும் ஒருவர் எழுந்து நடக்க வேண்டும். ஒரே இருக்கையாக இருக்கும்போது உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எழுந்து நடக்கும்போது அது உடலில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் பரவி சீராக இயங்கும்..  

இறைவன் தந்திருக்கும் இந்த புனித கண்களை பாதுகாப்போம். ஆரோக்யமாக வாழ்வோம்.... 


1 கருத்து:

உங்கள் கருத்து