பணம் பணம் பணம் -இதுவே தினமும் மனிதன் ஓதும் மாயமந்திரம் பணம் இல்லையேல் அவன் பிணம் -இது பழமொழிக்காக சொல்லித்திறியும் சாத்தான் வேதம் ஓட்டம் ஓட்டம் வாழ்க்கை முழுவதும் ஓயாத ஓட்டம் பணத்தை தேடியே வாழ்வை தொலைக்க வரிந்துகட்டிகொண்டு ஓட்டம் பணத்தை குவித்ததும் பாசத்தைத்தொலைக்கும் சில பச்சோந்திகளின் கூட்டம் பாசங்கள் கூட பணத்தின் முன்னே பணிந்துபோகும் அவலம்பணத்திற்காக பாசத்தைக்கூட விர்த்துக்கொள்ளும் இன்றைய காலம் பணம்வரும் முன்னே மனம் நிறைந்தஅமைதி பணம்வந்த பின்னே தொலையும் மனநிம்மதி பணத்தின் முன்னே பாசம் சரணாகதி பணம் வந்தபின்னே பாசம் சந்துபோவதோ விதி இறைவன் பணத்தை படைத்திருந்தால் இதயம் வைத்திருப்பான்- அதில் இரக்கத்தையும் இணைத்திருப்பான் இதை மனிதனல்லாவா படைத்தான் அதுதான் இதயத்தை இணைக்க தவறிவிட்டான் -அதில் இரக்கம் வைக்கவும் மறந்துவிட்டான். காகிதபணத்திற்கு ஏழைகளில் கதறல் கேட்குமா? மனிதர்களின் பாசம்தான் புரியுமா? மனிதர்களுக்கு பணம் அவசியம் அதைவிட பாசம் முக்கியம் பணம் நம்மைவிட்டுப்போனால் திரும்பவந்துவிடும் -ஆனால் பாசம் விட்டுப்போனால்! அதிலுள்ள மனமல்லவா நம்மைவிட்டுப்போகும் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை மாற்றி பாசம் மனதின் மத்தியிலே பணம் அதற்கு பக்கத்திலே என்ற புதுமொழியை உருவாக்குபணத்தின்மேல் உள்ள பக்தியை சற்று ஒதிக்கி அதன் இடைவெளியில் பாசத்தை சொருகு பணத்தையும் பாசத்தையும் இணைத்து பவித்திரமான மனிதனாய் வாழ்ந்துபார் தன்னை உணர்வதோடு பிறறையும் உணரும்போதுந்ததிற்கான பலனை இப்புவியிலேயே அடைவதை தெளிவாய் உணர்வாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்து