இன்றோடு நான் இந்த ப்ளாக் ஆரம்பிச்சு 3மாசம் ஆயிடுச்சுங்க. இதுலெல்லாம் எனக்கு அவ்ளோவா இன்டெரெஸ்ட் இல்லேனாலும் எல்லாரும் என் ப்ளாக் பாரு என் ப்ளாக் பாருன்னு சொல்றாங்களேன்னு அது என்னதான்னு பாத்துருவோம்னு எப்டியோ ஒரு வழியா க்ரியேட் பண்ணியாச்சு. அப்றம் அதுல எதாவது போடனும்ன்ல என்னத்தப் போடறதுன்னு யோசிச்சு யோசிச்சு பாத்தேன் ஒண்ணுமே தோனல. அப்பதான் முடிவு பண்ணினேன், இதெல்லாம் நமக்கு சரிப்பட்டுவராதுன்னு. அதுனால மத்த ப்ளாக்ல வர (நல்ல) தகவலை மட்டும் அப்பப்ப (சுட்டு) இதுல போட ஆரம்பிச்சேன். அப்போ திடீர்னு இது தோனுச்சு, நேத்து நடந்த சம்பவம்...சரி இதையாவது போட்டுப் பாப்போமேன்னுதான் இங்க போடறேன், படிச்சிட்டு நல்லா இருந்த மட்டும் சொல்லுங்க, இல்லேனா ஒண்ணுமே சொல்லாதீங்க. என்னடா தலைப்பு 110௦ வோல்ட் பல்புன்னு வச்சுட்டு இப்படி ப்ளேடு போட்டு கொல்றானேன்னு தோணுதா....ம்ம்ம் புரியுது.... ...இப்போ கீழ படிங்க.
எங்க வீட்டு கிட்சென்ல முந்தா நாள் பல்பு ப்யூஸ் ஆய்டுச்சுங்க, சரி கடைல போய் வேற பல்பு வாங்கிட்டு வந்து போடலாம்னு போய் வங்கிட்டும் வந்துட்டேன். நான் எப்பவுமே வெல்ல பல்பதான் விரும்புவேன், (அப்பதான் வீடும் மனசும் வெளிச்சமா இருக்கும்னு எனக்கு ஒரு அபிப்ராயம் ஹீ ஹீ ஹீ) நேத்து பான்டா சூப்பர்மாற்கெட்ல போயி ஒரு பல்பு வாங்கிட்டு வந்து போட்டு சுவிட்ச் ஆன் பண்ணினது மட்டும்தான் தெரியும், கிட்செனே பளிச்சுன்னு மின்னல் மாறி (மஞ்ச மின்னல்) ஒரு மின்னு மின்னிட்டு மறைந்திருச்சு, அதுவும் ஒரு அரை வினாடிதான்... டொப்ன்னு ஒரு மெல்லிய ஓசை, அவ்ளோதான் புச்ஷ்ன்னு போச்சு அந்த பல்பு. எனக்கோ மனசு ரொம்ப கஷ்டமா போச்சு. என்னடா 11 ரியால் கொடுத்து வாங்கின பல்பு ஒரு நாள் (அட ஒரு நிமிஷம்) கூட முழுசா எரியளையேன்னு ஒரே பீலிங், பார்த்தா அது 110 பல்பு, வீட்ல இருந்ததோ 220 வோல்ட், சரி எதுக்கும் கடைல போய் சொல்லிபார்போம்னு திரும்ப போனேன். போய் நடந்தத சொன்னேன், அவன் இது எத்தன வாட்ஸ்ன்னு செக் பண்ணினியான்னு கேட்டான், நான் அப்டியே தலைய சொறிஞ்சிகிட்டு இல்லேன்னு சொன்னேன், ஆனாலும் அவன் ரொம்ம்ம்மம்ப நல்லவந்தான், சரி, நீங்க அங்க போய் வேற பல்பு எடுத்துகோங்கனு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு அவர் வேலைய பாக்க போய்ட்டார். அப்பதான் புரிஞ்சிகிட்டேன் உண்மை ஒருபோதும் தோக்காதுன்னு. ஆஹா உண்மை ஜெய்ச்சிருசின்னு ஒரு மன திருப்தியோட அந்த பல்பை வாங்கிட்டு வீட்டுக்கு வந்து ஹோலடர்ல மாட்டி சுவிட்ச் ஆன் பண்ணினா, இன்னிக்குதான் இந்த வீடே புதுசா கட்டினாற்போல அப்டி ஒரு பிரகாசமாக இருந்தது....இதுவே உண்மைக்குக் கிடைச்சப் பரிசாக எண்ணி மன மகிழ்ச்சியடைந்தேன்.
"அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு, அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
அட நல்லா இருக்கே, ஆம் உண்மைக்கு என்றும் வெற்றி தான்!!
பதிலளிநீக்குஉண்மை தான்
பதிலளிநீக்குவெற்றி உண்மைக்கே
நல்ல முயற்சி தான் தொடருங்கள்.
உங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி. உண்மை வென்றுவிட்டது!
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ். உண்மைக்கு என்றுமே வெற்றிதான் என்பது உண்மைதான்
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி, இதுவே எனது முதல் (சொந்த) பதிவு என்பதால் உங்கள் பின்னூட்டம் ஒரு ஊக்க மருந்தாக இருக்கிறது...
பதிலளிநீக்கு//நான் எப்பவுமே வெல்ல பல்பதான் விரும்புவேன், (அப்பதான் வீடும் மனசும் வெளிச்சமா இருக்கும்னு எனக்கு ஒரு அபிப்ராயம் ஹீ ஹீ ஹீ) நேத்து பான்டா சூப்பர்மாற்கெட்ல போயி ஒரு பல்பு வாங்கிட்டு வந்து போட்டு சுவிட்ச் ஆன் பண்ணினது மட்டும்தான் தெரியும், கிட்செனே பளிச்சுன்னு மின்னல் மாறி (மஞ்ச மின்னல்) ஒரு மின்னு மின்னிட்டு மறைந்திருச்சு, அதுவும் ஒரு அரை வினாடிதான்... டொப்ன்னு ஒரு மெல்லிய ஓசை, அவ்ளோதான் புச்ஷ்ன்னு போச்சு அந்த பல்பு.//
பதிலளிநீக்குஇந்த வரிகளை படித்து விட்டு என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை,ஏனெனில், அந்த பல்புக்கு வந்த கஷ்டத்தையும் உங்களுக்கு வந்த கஷ்டத்தையும் நினைத்து
இந்த பதிவை படிக்கும்போது நான் வீட்டில் இருந்த போது உங்களோடு பகிர்ந்து கொன்ட நினைவுகள் வந்து விட்டன,
வாய்மையே வெல்லும்னு இந்த பதிவை படித்து விட்டு மீன்டும்
ரிசார்ஜு செய்து கொன்டேன்.
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. ஆம் நீங்கள் இங்கிருந்த பொது உள்ள நினைவுகள் என் மனதிலும் இன்னும் பசுமையாகவே இருக்கிறது. அந்த மஞ்ச பல்புல ஒரு காமெடி என்னன்னா அத மாட்டும் போது மகள் ஆய்ஷா காதையே பொத்தி பாத்துக்கொண்டு இருந்துச்சு. ஒரு வேல முன்னாடியே அது புச்ச்ச்சச்ச்ச்ஷாக போற விஷயம் தெரிஞ்சு இருக்குமோ!!!
பதிலளிநீக்கு