அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

சனி, 24 அக்டோபர், 2009

இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் ஈ பாஸ்போர்ட் திட்டம்

ஈ பாஸ்போர்ட் சேவையும் பாஸ்போர்ட் சேவா திட்டத்தையும் அடுத்த ஆண்டு முதல் தொடங்க உள்ளது. ஈ - பாஸ்போர்ட் வழங்குவதன் மூலம் பாஸ்போர்ட்டைடி ஜிட்டல் மயமாக்க உள்ளது இந்திய அரசு. அடுத்த வருடத்தில் 8 லட்சம் E-passport வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட் சேவா மூலம் தேவையற்ற கால தாமதத்தை தவிர்க்க முடியும் என அரசு நம்புகிறது. Build-Operate-Transfer (BOT) திட்டத்தின் கீழ் , டாட்டா (Tata Consultancy Services)நிறுவனத்தால்பாஸ்போர்ட் சேவா திட்டம் தனது சேவைகளை அளிக்க உள்ளது.இதன் மூலம் பொது மக்களுக்கு சரியான நேரத்தில், வெளிப்படையான, வசதியான முறையில்இந்த சேவைகள் வழங்கப்படும். இதற்கு ஆகும் செலவு 207.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் சுமார் ரூபாய்.10மில்லியன். இந்த ஈ- பாஸ்போர்ட் மூலம், தானியங்கி அடையாள உறுதி செய்தாலும் (automatic identity verification),வேகமான இமிக்ரேஷன் சோதனைகளும்,  ஆற்றல் மிக்க எல்லை பாதுகாப்புகளும் செய்து கொள்ளலாம். ஈ- பாஸ்போர்ட்டில் பாஸ்போர்ட்டின் பின்புறத்தில், ஒரு சிப் இணைக்கப்பட்டிருக்கும். இதில்பாஸ்போர்ட்டில் அச்சிடப்பட்டுள்ள தகவல்கள் மின்னணு தகவல்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.இதன் மூலம் பாஸ்போர்ட் தவறாக பயன்படுத்தப்பட்டாலோ, அச்சிடப்பட்ட தகவல்களுக்கும், மின்னணுதகவல்களுக்கும் வேறுபாடு இருந்தாலோ,  தேவையான் நடவடிக்கைகளை எடுக்க முடியும். The International Civil Aviation Organisation (ICAO), ஈ-பாஸ்போர்ட்டுகளுக்கான விதிகளை வகுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து